அர்ஜெண்டினா அணியால் இளைஞர் எடுத்த முடிவு: கடிதத்தில் எழுதி வைத்திருந்த வார்த்தைகள்

Report Print Santhan in கால்பந்து

உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் அர்ஜெண்டினாவின் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்யப் போவதாக கூறி கடிதம் எழுதிவைத்துவிட்டு மாயமாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் உலக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கிண்ணத்தை கைப்பற்றும் வாய்ப்பு இருக்கும் அணிகளில் அர்ஜெண்டினாவும் உள்ளது என்று கூறப்பட்ட நிலையில், குரூப் சுற்றுலே மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

முதல் போட்டி டிரா, இரண்டாவது போட்டியில் குரேசியாவிடம் 3-0 என்று தோல்வியடைந்ததால், அந்தணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதே கேள்வி குறியாக உள்ளது.

இந்நிலையில் கேரளாவின் கோட்டையம்மைச் சேர்ந்த டினு அலெக்ஸ் என்ற இளைஞர் அர்ஜெண்டினா அணியில் இருக்கும் மெஸ்ஸியின் தீவிர ரசிகர் என்று கூறப்படுகிறது.

குரேசியா அணியிடம் அர்ஜெண்டினா மிகவும் மோசமாக தோல்வியடைந்ததால், அந்த தோல்வியை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதனால் மிகவும் வேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்யப்போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமாகியுள்ளார்.

நேற்று முதல் பொலிசார் இவரை தேடி வரும் நிலையில், ஆற்றில் விழுந்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்