ரொனால்டோவுக்கு இடம் இல்லை.. மெஸ்சிக்கு தான்: கால்பந்து ஜாம்பவானின் தேர்வு

Report Print Kabilan in கால்பந்து

கால்பந்து உலகின் முன்னாள் ஜாம்பவான் பீலே, தனது அணியில் மெஸ்சிக்கு தான் இடம் என்றும் ரொனால்டோவுக்கு இடம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பிரேசிலின் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலே, தான் அணியை தேர்வு செய்வது கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

‘மெஸ்சியையும், ரொனால்டோவையும் ஒப்பிடுவது கடினமானது. ரொனால்டோவை விட மெஸ்சி முற்றிலும் வித்தியாசமான ஸ்டைலை கொண்டவர். ஏராளமானோர் என்னை ஜார்ஜ் பெஸ்ட் உடன் ஒப்பிடுவது உண்டு.

ஆனால், நாங்கள் வித்தியாசமான விளையாட்டு ஸ்டைலை உடையவர்கள். மெஸ்சி More organised வீரர், ரொனால்டோ More of a center-forward வீரர்.

நான் எனது அணியை தேர்வு செய்தால், ரொனால்டோவை விட மெஸ்சியைத்தான் தேர்வு செய்வேன். என்னுடைய அப்பா சிறந்த Center-forward வீரர். அவர் எனக்கு எப்படி விளையாட வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தார்.

என்னை விட மூன்று முறை கூடுதலாக கோல் அடிக்க வேண்டும் என்று கூறினார். அவர் தான் என்னை கால்பந்து விளையாட ஊக்குவித்தார். அவர் தான் எனக்கு உத்வேகம் அளித்தவர்’ என தெரிவித்துள்ளார்.

AFP

Reuters

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers