நாளை துவங்கும் ஜேர்மன் முதன்மை கால்பந்து போட்டி! டிவியில் நேரடி ஒளிபரப்பு

Report Print Abisha in கால்பந்து

ஜேர்மன் நாட்டில் முதன்மை கால்பந்து போட்டி நாளை துவங்குகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து கால்பந்து விளையாட்டு போட்டிகள் நடைபெறாமல் உள்ளன.

ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்தை கொரோனா வைரஸ் சின்னபின்னமாக்கிய போதிலும் ஜேர்மன், கொரோனாவை சிறப்பாக கையாண்டு வருகிறது.

இதனால் கால்பந்து போட்டிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி அந்நாட்டின் முதன்மை கால்பந்து லீக்கான பண்டேஸ்லிகா, அணி வீரர்களை தயார்படுத்தியது. கடந்த சில நாட்களாக வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் நாளை பண்டேஸ்லிகா கால்பந்து போட்டிகள் நடைபெற இருக்கின்றன. ஒரே நாளில் ஆறு போட்டிகள் நடைபெறுகின்றன. அனைத்து போட்டிகளும் டிவி மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்த வேண்டும், ஐந்து மாற்று வீரர்களை பயன்படுத்தி கொள்ளலாம், வீரர்கள் மிகப்பெரிய அளவில் உடல் அளவில் தாக்கக்கூடாது ஆகிய கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடக்கின்றன.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்