போட்டியின் நடுவில் மைதானத்துக்குள் நுழைந்த நாய் செய்த அட்டகாசம்; நாயை பிடித்த வீரர் செய்த எதிர்பாராத செயல்! வைரல் வீடியோ

Report Print Ragavan Ragavan in கால்பந்து
230Shares

பொலிவியா நாட்டின் லா பாஸ் நகரில் கிறிஸ்துமஸ் தினத்தன்று மாலை The Strongest மற்றும் Club Atlético Nacional Potosí ஆகிய அணிகளுக்கு இடையில் போலிவியன் சாக்கர் லீக் கால்பந்து போட்டி நடைபெற்றது.

போட்டியின் இரண்டாம் பாதி நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில், திடீரென மைதானத்துக்குள் நுழைந்த ஒரு நாய் கால்பந்து வீரரின் ஒரு க்ளீட் ஷுவை வாயில் கவ்வியபடி ஓடிவந்தது. அதனைக்கொண்டு சற்று நேரம் புல்வெளியில் புரண்டு விளையாடியது.

சுவாரஸ்யமாக இருந்த நாயின் செயலைப் பார்த்து ரசிக்கத் தொடங்கிய வீரர்கள் விளையாடுவதை நிறுத்திவிட்டு, நாயைப் பிடித்து கொஞ்ச ஆரம்பித்தனர்.

அப்போது The Strongest அணியின் வீரரான ரவுல் காஸ்ட்ரோ (31) நாயை தூக்கி கொஞ்சிவிட்டு, மைதானத்தின் வெளியே கொண்டுசென்று இறக்கிவிட்டார்.

போட்டி முடிந்த பிறகும், அந்த நாயைப் பற்றிய எண்ணம் தொடர்ந்து இருந்ததால், மைதானத்தின் கூடாரத்தில் வேலை செய்பவர்களை தொடர்பு கொண்ட காஸ்ட்ரோ, இறுதியாக இப்போது அந்த நாயை தனது செல்லப் பிராணியாக தத்தெடுத்துக்கொண்டார்.

முன்னதாக மக்கள் அழைத்துவந்த 'Cachito' என்ற பெயரையே நாய்க்கு வைத்து காஸ்ட்ரோ வளர்த்துவருகிறார்.

காஸ்ட்ரோவின் இந்த எதிர்பாராத செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தியதுடன், சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களையும் பெற்றுவருகிறது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்