இன்று பிரான்ஸ் ஜனாதிபதி ஹொலாண்ட்டின் இறுதி அமைச்சரவை கூட்டம்

Report Print Thayalan Thayalan in பிரான்ஸ்

பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹொலாண்ட் இன்று தனது இறுதி அமைச்சரவை கூட்டத்தை நடத்தியுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள இமானுவல் மக்ரோங்கிடம் ஆட்சி அதிகாரங்களை கையளிப்பதற்கு ஒருசில நாட்களுக்கு முன்னதாக இந்த அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றுள்ளது.

பிரான்ஸின் தற்போதைய ஜனாதிபதியான ஹொலாண்ட் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு ஆட்சி அதிகாரங்களை இமானுவல் மக்ரோங்கிடம் கையளிக்கவுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்ரோங் அரசு எதிர்வரும் ஜூன் மாதம் நாடாளுமன்ற தேர்தல்களுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அடிமைத்தன ஒழிப்பு நினைவுகூரலில் இணைந்து பங்கேற்ற பிரான்சுவா-மக்ரோங்!
பிரான்ஸில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதன் நினைவுகூரல் நிகழ்வில் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹொலாண்ட் மற்றும் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள இமானுவல் மக்ரோங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பரிஸ் லக்ஸம்பேர்க் பூங்காவில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இரு தலைவர்களும் அருகருகே நின்றிருந்த காட்சி ஊடக காணொளில் பதிவாகியுள்ளது.
குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்கு முன்னதாக பிரான்சுவா ஹொலாண்ட் முன்னதாக தனது இறுதி அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று ஹொலாண்ட் அரசில் இரண்டு வருடங்கள் பொருளாதார அமைச்சராக மக்ரோங் பணியாற்றியிருந்தார் என்பதும் கூட்டிக்காட்டத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments