குப்பை மேடாக காட்சியளிக்கும் பாரிஸ்: வேலைநிறுத்த எதிரொலி

Report Print Gokulan Gokulan in பிரான்ஸ்
264Shares
264Shares
lankasrimarket.com

துப்புரவு தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் சில பகுதிகள் குப்பை மேடாக காட்சியளித்து வருகிறது.

ONET நிறுவனத்தின் கிளை நிறுவனமான H.Reinier நிறுவனத்தில் பணிபுரியும் 400-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் கடந்த டிசம்பர் 2-ஆம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தின் எதிரொலியாக பிரான்ஸின் பல தெருக்கள் குப்பையால் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொது மக்கள் அதிகமாக நடமாடக்கூய இரயில் நிலையம் போன்ற இடங்களிலும் குப்பைகள் தேங்கி இருப்பதால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்ந்து துர்நாற்றம் வீசி வருவதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று(6/12/2017) நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் SNCF மாற்று ஏற்பாடுகளை பயன்படுத்தி தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்