மக்ரோன் தொடர்பாக எந்த கருத்துக்களும் இல்லை!

Report Print Pious in பிரான்ஸ்

கருத்துக்கணிப்பு நிறுவனமான Cevipof வெளியிட்டுள்ள புதிய கருத்துக்கணிப்பில், அதிகளவான பிரெஞ்சு மக்களுக்கு, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தொடர்பாக எந்த கருத்தும் இல்லை என தெரியவந்துள்ளது.

ஜனாதிபதியாக இம்மானுவல் மக்ரோன் பொறுப்பேற்ற 7 மாதங்களின் பின்னர், குறித்த கருத்துக்கணிப்பு நிறுவனம், கடந்த நவம்பர் மாதத்தில் 12,875 பேர்களிடம் கருத்துக்கணிப்பு எடுத்திருந்தது. இதில் மக்ரோனின் செயற்பாடுகள் 23 வீதமானவர்கள் திருப்தி எனவும், 31 வீதமானவர்கள் திருப்தி இல்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளார்கள். ஆனால் கருத்துக்கணிப்பில் ஈடுபட்டவர்களில் 46 வீதமானவர்கள் 'கருத்து இல்லை!' என குறிப்பிட்டுள்ளார்கள். பல்வேறு நிறுவனங்கள், பல்வேறு தருணங்களில் மேற்கொள்ளப்பட்ட எந்த கருத்துக்கணிப்பிலும் இந்த வீதமானவர்கள் கருத்து இல்லை என தெரிவித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எண்ணிக்கையில் அதிகளவான பிரெஞ்சு மக்கள் கருத்து இல்லை என தெரிவிப்பதும் இதுவே முதன் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தவிர, இதே நிறுவனம் கடந்த மே மாதத்தில் மேற்கொண்ட இதேபோன்றதொரு கருத்துக்கணிப்பில் இருந்து, 'திருப்தி இல்லை' என வாக்களித்தவர்களின் வீதம் 18 புள்ளிகளால் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்