பிரான்சில் குளியலறையில் பிணமாக கிடந்த கர்ப்பிணி பெண்

Report Print Harishan in பிரான்ஸ்
275Shares
275Shares
ibctamil.com

பிரான்ஸில் கர்ப்பிணி பெண் ஒருவர் குளியலறையில் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Grenoble பகுதிக்கு அருகில் வசித்து வந்த 8 மாத கர்ப்பிணி பெண்(வயது 21) ஒருவர் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

பணிக்கு சென்று திரும்பிய கணவர் கதவை தட்டிய போது திறக்காத காரணத்தால், கதவை உடைத்து உள்ளே நுழைந்து பார்த்த போது, அவரது மனைவி குளியலறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதுகுறித்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு, மனைவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அப்பெண் மற்றும் அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் பரிதாபமாக இறந்து போனது.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிசார் கூறுகையில், அப்பெண் மயங்கி கிடந்த இடத்திற்கு அருகே அவரது செல்போன் சார்ஜிங் நிலையில் இருந்ததாகவும், அப்போது மின்சாரம் தாக்கி இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் கடந்தாண்டு ஜூலை மாதம் குளியலறையில் செல்போன் பயன்படுத்தியபோது மின்சாரம் தாக்கியதில் இளம்பெண் ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்