பாரிஸ் விமான நிலையத்தில் மோதல்: பிரான்ஸ் சொல்லிசை பாடகர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
205Shares
205Shares
ibctamil.com

பிரான்சின் ஓர்லி விமான நிலையத்தில் மோதலில் ஈடுபட்டிருந்த இரண்டு சொல்லிசை பாடகர்களுக்கு, இன்று Créteil குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அக்டோபர் 9 ஆம் திகதிக்கு தள்ளிவைத்த வழக்கு, இன்று Créteil நீதிமன்றத்துக்கு தீர்ப்புக்கு வந்தது.

ஆகஸ்ட் 1 ஆம் திகதி, Booba மற்றும் Kaaris ஆகிய இரண்டு சொல்லிசை பாடர்களும் ஓர்லி விமான நிலையத்தில் மோதலில் ஈடுபட்டு, பல பொருட்களை சேதப்படுத்தியதுடன், பல விமானங்களையும் தாமதப்படுத்தினார்கள்.

இதனால் விமான நிலையத்தின் ஒரு பகுதி சில மணிநேரம் மூடப்பட்டும் இருந்தது.

இந்த விவகாரம் தொடர்பில் இரண்டு தடவைகள் விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, பின்னர் இன்றைய திகதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இன்று செவ்வாய்க்கிழமை Booba மற்றும் Kaaris ஆகிய இரு பாடகர்களுக்கும் 18 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தவிர ஒவ்வொருவரும் €50,000 அபராதமும் செலுத்தவேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்