பாரிஸில் மர்ம கும்பலால் பரிதாபமாக வெட்டப்பட்ட இளைஞன்: இலங்கை சமூகத்துக்கு இடையே நடந்த மோதலா?

Report Print Kavitha in பிரான்ஸ்

பாரிஸின் லாச்சப்பல் மற்றும் ஸ்ராலின்கிராட் பகுதிகளிற்கு இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வாள்வெட்டு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

ஸ்ராலின்கிராட் அருகிலுள்ள, பாரிஸ் 10 இல் அமைந்துள்ள Boulevard de la Villette இல் நட்ட நடு வீதியில் 29 வயது இளைஞனை , பல இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று, வாள், இரும்புக் கம்பிகள் கொண்டு துரத்தியுள்ளனர்.

குறித்த இளைஞன்அவர்களிடம் இருந்து ஓடி வந்த, அங்கு வந்த ஒரு பேருந்தில் ஏற முயன்றபோதும், பயணிகளின் பாதுகாப்புக் கருதி, பேருந்துச்சாரதி கதவைத் திறக்கவில்லை.

இந்நிலையில் அந்தப் பேருந்தின் முன்னே வைத்தே, அந்தக் குழுவால் இளைஞனின் கை, வெட்டப்பட்டது.

Château-Landon 20:50 அளவில், இல் 48 இலக்கப் பேருந்துத் தரிப்பிடத்தில், குறித்த இளைஞன் கைவெட்டப்பட்ட நிலையில், இரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார்.

குறித்த இளைஞனை அவசரமுதலுதவிப் படையாலும் காவற்துறையினராலும் மீட்கப்பட்டு, Georges-Pompidou வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு, உயிரைக் காப்பதற்காக, இவரது கை முழுவதும் வெட்டி அகற்றப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தை, பேருந்தின் கண்காணிப்புக் கருவி ஒளிப்பதிவு செய்துள்ளது அதுமட்டுமின்றி சாரதி நேரடிச் சாட்சியத்தைக் காவற்துறையினரிற்கு வழங்கி உள்ளார்.

இளைஞன் இரத்த வெள்ளத்தில் கிடந்த பகுதியில் இருந்து, ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு இரத்தத் தடயங்கள் கிடந்ததாகவும் இந்த சம்பவம் இலங்கை சமூகத்துக்கு இடையே நடந்த மோதல் என்றும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers