பாரிஸில் நிர்வாணப்பிரியர்களுக்காக சிறப்பு ஏற்பாடு!

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

கோடை காலத்தை முன்னிட்டு பாரிஸில் நிர்வாணப்பிரியர்களுக்காக, பூங்கா ஒன்று திறக்கப்பட உள்ளது.

குறித்த பூங்காவானது எதிர்வரும் அக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரை திறந்திருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாரிஸ் நகரின் Bois de Vincennes பூங்காவின் ஒரு பகுதி கடந்த வருட கோடை காலத்தின் போது நிர்வாணப்பிரியர்களுக்காக திறந்திருந்தது.

இந்நிலையில், இந்தவருடமும் இந்த பூங்காவில் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 7,300 சதுர மீற்றர் பரப்பளவில், நிர்வாணப்பிரியர்களுக்கான விளையாட்டுத்திடல், ஓய்வு இருக்கைகள் என பூங்காவின் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதி, காலை 8 மணியில் இருந்து இரவு 9:30 மணி வரை அனைத்து நாட்களும் திறந்திருக்கும்.

கடந்த 2018 ஆண்டு ஜூன் 24 ஆம் திகதி இந்த பூங்காவின் ஒரு பகுதி, நிர்வாணப்பிரியர்களுக்காக முதன் முறையாக திறக்கப்பட்டது.

அதன்போது 1,000 க்கும் மேற்பட்ட நபர்கள் வருகை தந்திருந்தனர். இந்த வருடமும் அதுபோன்று மக்கள் வருகையை எதிர்பார்க்கின்றனர். வரும் ஜூன் 30 ஆம் திகதி முதல் இந்த பூங்கா திறந்திருக்கும்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்