காப்பீடு இன்றி வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம்: புதிய விதிகள் அறிமுகம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் காப்பீடு இன்றி வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் புதிய விதிகள் இந்த வாரத்திலிருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சுமார் 750,000 ஓட்டுநர்கள் முறையான காப்பீடு இன்றி பிரான்சில் வாகனம் ஓட்டுவதாக தெரியவந்துள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இனி முறையான காப்பீடு இன்றி வாகனம் ஓட்டுபவர்களுக்கு 3,750 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படுவதோடு அவர்களது ஓட்டுநர் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்படும். அத்துடன் அவர்களது வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.

இந்த விதிகள் ஜூன் 4ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளன.

இதற்காக காப்பீட்டு நிறுவனங்கள் இணைந்து ஒரு டேட்டா பேஸை உருவாக்கியுள்ளன. அதில் முறையாக காப்பீடு செய்யப்பட்ட வானங்களின் விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதை வைத்து, பொலிசார் ஒரு வாகனம் முறையாக காப்பீடு செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம்.

பாரீஸ் மற்றும் சுற்று வட்டாரங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய திட்டம், விரைவில் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த புதிய விதிகளிலிருந்து, விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள், இராணுவ வாகனங்கள் மற்றும் தூதரக வாகனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்