குடிநீரால் பிரான்ஸ் மக்களுக்கு ஆபத்து இருக்கிறதா? வெளியான அதிகாரப்பூர்வ விளக்கம்

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகரில் உள்ள குழாய் நீர் பொது சுகாதாரத்திற்கு ஆபத்து விளைவிக்கும் என்பதை மறுத்துள்ள பாரிஸ் பிராந்திய அதிகாரிகள், அணுக்கரு உறுப்பு ட்ரிடியம் மூலம் தண்ணீர் மாசுபட்டதாகக் கூறுவது போலி செய்தி, சமூக ஊடக வதந்திகள் என்று விவரித்துள்ளது.

தண்ணீரில் உள்ள ட்ரிடியத்தின் அளவுகள் பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தாது. குழாய் நீரை கட்டுப்பாடில்லாமல் குடிக்கலாம் என்று பாரிஸ் நகரம் ட்விட்டரில் விளக்கமளித்துள்ளது.

பாரிஸ் பிராந்தியத்திலும் லோயர் மற்றும் வியன்னே பகுதிகளிலும் ஆறு மில்லியன் மக்கள் ட்ரிடியத்துடன் மாசுபட்ட குழாய் நீரைக் குடிப்பதாக பிரான்ஸ் கதிரியக்கக் கண்காணிப்புக் குழுவான ACRO அறிக்கை ஒன்றை வெளியிட்டதை அடுத்து பிராந்தியத்தில் வதந்திகள் பரவ தொடங்கின.

ACRO அறிக்கை சுகாதார அமைச்சகத்தின் தரவை அடிப்படையாகக் கொண்டது மற்றும் பிரான்ஸ் முழுவதும் குழாய் நீரில் சராசரி ட்ரிடியம் அளவின் வரைபடத்தை உள்ளடக்கியது ஆகும். குறிப்பிடப்பட்ட பிராந்தியங்களில் ட்ரிடியத்தின் அவை அதிகமாக உள்ளன, ஆனால் அதிகாரிகள் குறிப்பிடடுள்ள 100 பெக்கோரல் தரத்தை விட அதிகமாக இல்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ACRO இன் கண்டுபிடிப்புகள் குறித்து செய்தி வெளியிட்ட உள்ளூர் ஊடகங்கள், டிரிட்டியத்தின் அளவு ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்காது என்பதை அந்த அறிக்கை தெளிவுபடுத்தவில்லை என தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், பாரிஸ் செவிலியர் எழுதியதாகக் கூறப்படும் செய்தி வாட்ஸ் அப்பில் வைரலாகி வந்ததை அடுத்து சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவத் தொடங்கியது. வாட்ஸ் அப் செய்தியில், பாரிஸ் குழாய் நீரில் டைட்டானியம் இருப்பு பற்றி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பாரிஸ் மாகாணம் தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் தண்ணீரைக் குடிப்பது ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்காது, குறுகிய, நடுத்தர அல்லது நீண்ட காலத்திற்கு எந்த ஆபத்தும் இல்லாமல், தண்ணீரில் எண்ணற்ற அளவுகளில் ட்ரிடியம் உள்ளது என்று பாரிஸ் நீர் நிறுவனம் தனது ட்விட்டரில் எழுதியது.

பிரான்சில் ட்ரிடியம் அளவிற்கான தரக் குறிப்பு 100 பெக்கோரல் ஆக அமைக்கப்பட்டுள்ளது, இது உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த 10,000 பெக்கோரல்-ஐ விட மிகக் குறைவு என்று Eau de Paris ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்