கணவருடன் ஸ்கூட்டரில் சென்ற மனைவி.. இரத்த வெள்ளத்தில் பிணமான துயரம்: என்ன நடந்தது?

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்சில் பிரத்தானியர்களின் பிரபலமான ரிசார்ட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சுற்றுலாப் பயணி கொல்லப்பட்டார்.

57 வயதான அந்தப் பெண் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் வாடகை ஸ்கூட்டரில் தனது கணவருடன் சென்றபோது தோட்டாக்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

பிரான்சின் தெற்கில் டூலோனுக்கு அருகில் ஒல்லியோல்ஸில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில், ஏ.கே .47 துப்பாக்கியை பயன்படுத்தி தாக்குதல் நடத்திய மர்ம கும்பல், சுற்றுலாப் பயணி உட்பட மூன்று பேரைக் கொன்றனர். இதில், குற்ற வழக்கு பதிவுகளுடன் பெயரிடப்படாத 29 மற்றும் 30 வயதுடைய இரண்டு ஆண்களும் கொல்லப்பட்டனர்.

சம்பவம் குறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தம்பதியினர் தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்தனர். வாடகை ஸ்கூட்டரில் வந்தவர்கள், மர்ம கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிக்கினர்.

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக பொலிஸாருக்கு தெரிந்த இரண்டு ஆண்களுடன், அந்தப் பெண்ணின் முதுகில் அடிபட்டு இறந்தார்.

ஸ்கூட்டரை ஓட்டிக்கொண்டு அந்தப் பெண்ணின் கணவர் தோள்பட்டையில் தோட்டாவால் தாக்கப்பட்டு தற்போது டூலோனில் மருத்துவமனையில் உள்ளார். அந்தப் பெண் ஸ்கூட்டரின் பின்புறத்தில் இருந்ததால், பின்னால் இருந்து தாக்கப்பட்டு உயிரிழந்தார் என கூறினார். இத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகள் குறித்த விவரம் தற்போது வரை வெளியாகவில்லை.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers