பிரான்சில் வாடகை காரில் சென்ற தம்பதியினரின் சூட்கேஸில் வந்த துர்நாற்றம்... என்ன இருந்துள்ளது தெரியுமா?

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் விமானநிலையத்தில் இருந்து வாடகை காரில் பயணித்த தம்பதியினர் சூட்கேசில் சடலத்தை கடத்தியிருப்பது தெரியவந்துள்ளதால், பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருக்கும் ஓர்லி சர்வதேச விமானநிலையத்தில் இருந்து இரண்டு தம்பதியினர் வாடகை காரில் Verrières-le-Buisson நோக்கி அவர்கள் பயணித்துள்ளனர்.

அப்போது அவர்களின் சூட்கேசில் கனமான பொருள் இருப்பதை அறிந்த கார் டிரைவர், அதன் பின் அதிலிருந்து துர்நாற்றம் வருதை கண்டுபிடித்துள்ளார்.

இதையடுத்து அடுத்த நாளும் காரில் தொடர்ந்து துர்நாற்ற்ம வீசியதால், சந்தேகமடைந்த அந்த கார் டிரைவர் உடனடியாக அப்படியே காரை பாரிஸ் 13 ஆம் வட்டார காவல்துறையினரிடம் காட்டியுள்ளார்.

அபோது காரிலிருந்து வந்த துர்நாற்றம் சடத்தின் துர்நாற்றம் என்பதை உறுதி செய்த பொலிசார், குறித்த காரில் பயணித்த தம்பதியினரை தேடி வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்