மறுமுனையில் அவள் உங்களுக்காக காத்திருக்கிறாள்: பிரான்ஸ் சாலையில் வித்தியாசமான எச்சரிப்பு பலகை!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
447Shares

பிரான்ஸ் மேயர் ஒருவர், ’சாலையின் மறுமுனையில் அவள் உங்களுக்காக காத்திருக்கிறாள்’ என்பது போன்ற அறிவிப்பு பலகைகளை சாலைகளில் அமைத்திருக்கிறார்.

அதற்கான காரணம்? பிரான்சிலுள்ள Montrécourt என்ற கிராமத்தை ஒட்டியுள்ள நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன சாரதிகள் யாரும், அங்கு மணிக்கு 30 கிலோமீற்றர் வேகத்தில்தான் செல்லவேண்டும் என்ற வேகக்கட்டுப்பாட்டு விதியை மதிப்பதேயில்லை.

ஆகவே, அதன் மேயரான Marc Guillez வேகக்கட்டுப்பாட்டு அறிகுறிகளுக்கு அருகில் வித்தியாசமான, வேடிக்கையான பதாகைகளை அமைத்துள்ளார்.

அவற்றில், வேகத்தைக் குறையுங்கள், இல்லையென்றால் எங்கள் மேயருக்கு கோபம் வரும், வேகமாக செல்லுங்கள், சாலையின் மறுமுனையில் அவள் (மரணம்) உங்களுக்காக காத்திருக்கிறாள், என்பது போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

France3 / Screenshot

வேகமாக செல்லும் வாகனங்களால் கவலையடைந்துள்ள கிராம மக்கள், வேகக்கட்டுப்பாட்டை செயல்படுத்துவதற்காக மேயர் எடுத்துள்ள புதுமையான முயற்சியை வரவேற்றுள்ளார்கள்.

இது மேயரின் முதல் முயற்சிதான், வெறும் பதாகைகளுடன் அவர் நிறுத்தப்போவதில்லையாம்.

வரும் மாதங்களில், ஸ்மார்ட் போக்குவரத்து விளக்குகளை நிறுவப்போகிறாராம் அவர்.

France3 / Screenshot
France3 / Screenshot

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்