9/11 தாக்குதல்களுக்கும் அமெரிக்க உளவுத்துறைக்கும் தொடர்பு: சர்ச்சையை ஏற்படுத்திய பிரான்ஸ் பாடப்புத்தகம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டு வரலாறு பாடப்புத்தகம் ஒன்றில், அமெரிக்க மத்திய உளவுத்துறை ஏஜன்சி 9/11 தாக்குதல்களை அரங்கேற்றியிருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புத்தகம் நவம்பர் மாதமே வெளியாகிவிட்டது என்றாலும், ஆசிரியர் ஒருவரின் மகள் இந்த புத்தகத்தை வாங்கிவந்தபோதுதான் இந்த விடயம் அந்த ஆசிரியரின் கவனத்துக்கு வந்துள்ளது.

பின்னர் ஆசிரியர்கள் சமூக ஊடகங்களில் இது குறித்து விவாதித்தபின்னரே விடயம் வெளியில் வந்துள்ளது.

அல் கொய்தா அமைப்பு உருவானதைக் குறித்தும், 11/9/2001 அன்று நியூயார்க்கிலும் வாஷிங்டனிலும் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தும் அந்த புத்தகத்தின் ஆசிரியர் விவரிக்கிறார்.

அதற்குப்பிறகு, இப்படி ஒரு அறிக்கையை அவர் பதிவு செய்துள்ளார்.

GETTY IMAGES

’இந்த நிகழ்வு, அமெரிக்க உளவுத்துறையால் அரங்கேற்றப்பட்டிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மத்திய கிழக்கு நாடுகள் மீது தனது தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக அமெரிக்கா அதை செய்திருக்கும், அமெரிக்காவிலேயே அமெரிக்க வல்லமையின் அடையாளங்களையே அது தாக்கிவிட்டது’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த ஆசிரியர் மற்ற ஆசிரியர்களுடன் இந்த விடயத்தை பகிர்ந்துகொள்ள, அதனால் கடும் சர்ச்சை ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து அந்த புத்தகத்தின் பதிப்பாசிரியர் நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளதோடு, கடைகளுக்கு அனுப்பப்படாத புத்தகங்களிலும் ஒன்லைனில் வெளியாகியுள்ள புத்தகங்களிலும் திருத்தம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

BBC

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers