கொரோனா அச்சம்: விசா தொடர்பில் பிரான்ஸ் எடுத்துள்ள முடிவு!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

கொரோனா அச்சம் காரணமாக, உலக நாடுகள் பல பயணக்கட்டுப்பாட்டுகளை அமுல்படுத்திவரும் நிலையில், விசா தொடர்பில் பிரான்ஸ் சில முடிவுகளை எடுத்துள்ளது.

மிகக் குறைந்த அளவிலேயே பிரான்சில் வர்த்தகத்தால் வருவாய் வரும் நிலையில், தங்கள் விசாக்களை புதுப்பிப்பது தொடர்பாக வெளிநாட்டவர்கள் பலர் கவலையடைந்துள்ளார்கள்.

இந்நிலையில், இப்படிப்பட்ட சூழல் ஏற்பட்டுள்ளதையடுத்து, தற்போதுள்ள விசாக்கள் மற்றும் titres de séjour வாழிட உரிமங்கள் ஆகியவை மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என பிரான்ஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள்.

நாட்டின் எல்லைகள் மூடப்பட்டு, அத்தியாவசியம் ஏற்பட்டாலொழிய, எல்லோரும் வீடுகளுக்குள் இருக்கும்படி அரசு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ள நிலையில், விசாக்களையும் வாழிட உரிமங்களையும் புதுப்பிப்பது நடக்காத காரியம்.

ஆகவே, மூன்று மாதங்களுக்கு இந்த பிரச்சினை இல்லாதபடிக்கு அரசு தக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நீட்டிப்பு, நீண்ட கால விசாக்கள் (Long stay visas), Titres de séjour, புகலிடக் கோரிக்கைகள் மற்றும் carte de séjourக்கான ரசீதுகள் பெறுதல் ஆகியவற்றிற்கு பொருந்தும்.

ஏற்கனவே பிரான்சில் இருப்போர் மற்றும் விசா, titres de séjour வாழிட உரிம திட்டத்தின் கீழிருப்போருக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

ஆனால், பிரான்சில் வாழும் பிரித்தானியர்களுக்கு இது பொருந்தாது.

அவர்கள் கொஞ்சம் வித்தியாசமான ஒரு நடைமுறையைப் பின்பற்றவேண்டியிருக்கும். இந்த கால நீட்டிப்பு மார்ச் 16ஆம் திகதியிலிருந்து மூன்று மாதங்களுக்கு செய்யப்படும்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்