ஊதியம் வழங்க நாங்கள் இருக்கிறோம்... எங்கள் உதவியை பயன்படுத்திக்கொள்ளுங்கள்: நிறுவனங்களுக்கு பிரான்ஸ் அழைப்பு!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

அரசு வழங்கும் கொரோனா உதவி திட்டங்களை பயன்படுத்திக்கொண்டு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுங்கள், அவர்களை வேலையை விட்டு அனுப்பாதீர்கள் என பிரான்ஸ் அரசு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ள கொரோனாவால், பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதை தவிர்ப்பதற்காக, அரசு வழங்கும் நிதியுதவியைப் பெற்றுகொண்டு தங்கள் பணியாளர்கள் பகுதி நேர வேலைக்காவது திரும்பும் விதத்தில் ஒப்பந்தங்கள் செய்துகொள்ளுமாறு பிரான்ஸ் பிரதமர் Jean Castex நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

செப்டம்பருக்கும் நவம்பர் 1க்கும் இடையில் இந்த ஒப்பந்தங்களை சீக்கிரமாக செய்துகொள்ளுமாறு பிரதமர் நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளார்.

'Chomage partiel' என்னும் இந்த திட்டத்தின் கீழ் ஒப்பந்தம் செய்துகொள்ளும் நிறுவனங்களின் பணியாளர்கள் அனைவருக்கும், அவர்கள் பகுதி நேர வேலை செய்தால் கூட, 93 சதவிகித ஊதியத்தை அரசே வழங்கும்.

இந்த திட்டம், அடுத்த கோடை வரை நீடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்