உங்களுக்கு வேண்டியதுதான்... பிரெக்சிட்டால் மீன்களை விற்பதில் பிரித்தானியாவுக்கு பிரச்சினை: குதூகலிக்கும் பிரான்ஸ்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
320Shares

பிரெக்சிட்டால் உருவாகியுள்ள சில நிர்வாக பிரச்சினைகளால், பிரித்தானியர்கள் தங்கள் மீன்களை கிட்டத்தட்ட ஏற்றுமதி செய்யவே இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

பிரெக்சிட்டால் பிரான்ஸ் பகுதி மீனவர்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்ப்பாராமல் பிரித்தானியாவுக்கே சிக்கல் ஏற்படுள்ளது.

இதனால், ’அது உங்களுக்கு வேண்டியதுதான்’ என ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பிரான்ஸ் அமைச்சர் Pierre Karleskind கொக்கரித்துள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் கூட்டாளியும் ஐரோப்பிய ஒன்றிய விவகார அமைச்சருமான Clement Beauneம், இப்படி ஒரு சூழல் ஏற்பட்டதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்திய Michel Barnierஐ புகழ்ந்துள்ளார்.

அவர், நன்றி Michel Barnier அவர்களே, ஐரோப்பிய ஒற்றுமையை நீங்கள் காப்பாற்றிவிட்டீர்கள், அதுதான் நமக்கு முக்கியம் என அவரை புகழ்வது போல், பிரித்தானியாவுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்த தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரச்சினை என்னவென்றால், குறிப்பாக ஸ்காட்லாந்து மீனவர்கள் தாங்கள் பிடித்த மீன்களை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஆவணங்களைப் பெற, வழக்கத்தைவிட ஐந்து மடங்கு நேரம் அதிகம் காத்திருக்கவேண்டியுள்ளது.

ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் தகவல் தொடர்பு துறையில் பிரச்சினைகள் இருந்துவந்த நிலையில், இனி சில வர்த்தகர்களால் தொடர்ந்து வணிகம் செய்ய இயலாதோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது.

இதனால், ஸ்காட்லாந்து மீனவர்களின் கோபம் ஸ்காட்லாந்து முதன்மை அமைச்சரான Nicola Sturgeon மீது திரும்பியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்