நகருக்குள் புகுந்து மனிதர்களை பதறவைத்த காட்டுபன்றிகள்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனில் உள்ள Heide நகரத்தில் திடீரென்று புகுந்த இரண்டு காட்டுப்பன்றிகள் வன் செயல்களில் ஈடுபட்டதில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று காலை நகருக்குள் நுழைந்த இந்த காட்டுப்பன்றிகள் அங்கிருந்த சாலைகளில் வெறித்தனமாக ஓடியும், ஷொப்பிங் மாலில் நுழைந்தும் மனிதர்களை அச்சுறுத்தினர்.

இதனை அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று, பன்றிகளை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். சில மணிநேரங்கள் பன்றிகள் வன்செயலில் ஈடுபட்டதால், அந்த நகரத்து மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும் என்றும் கடைக்குள் இருப்பவர்கள் அதனுள்ளேயே பத்திரமாக இருக்குமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

பன்றியின் தாக்குதலில் காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர், மேலும் ஒரு நபரின் கைவிரலை கடித்து எடுத்துள்ளது. நேரம் ஆக ஆக பன்றியின் வன்செயல் அதிகரித்த காரணத்தால் வேட்டையாடும் நபர்கள் வரவழைக்கப்பட்டு, சுட்டுப்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதில், பன்றியில் தலையை நோக்கி சுட்டதில் இரண்டு பன்றிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. அதன்பின்னர் பொலிசார் உயிரிழந்த பன்றிகளை அப்புறப்படுத்தியுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers