ஃப்ளூ காய்ச்சல் நோயாளிகளால் நிரம்பி வழியும் ஜேர்மன் மருத்துவமனைகள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
418Shares
418Shares
lankasrimarket.com

ஜேர்மனியின் பல மருத்துவமனைகள் ஃப்ளூ காய்ச்சல் நோயாளிகளால் நிரம்பி வழிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Robert Koch Institute, இந்த வாரம் ஜேர்மனியில் அதிகபட்சமாக 24,000 பேருக்கு ஃப்ளு காய்ச்சல் உள்ளதாக தெரிவிவித்துள்ளது. கடந்த வாரம் இந்த எண்ணிக்கை 18,700 ஆக இருந்தது.

Robert Koch Institute வெளியிட்டுள்ள வரைபடம் ஒன்று கடந்த வாரத்திற்கும் இந்த வாரத்திற்கும் ஃப்ளூ காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கையில் உள்ள வித்தியாசத்தைக் காட்டுகிறது.

இந்த குளிர் காலத்தில் நாடு முழுவதிலும் சுமார் 82,000 பேருக்கு ஃப்ளூ காய்ச்சல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதில் 136 பேர் வரை உயிரிழந்திருக்கிறார்கள், இறந்தவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே வேறு பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த முதியவர்கள் ஆவர்.

Frankfurtஇல் உள்ள மருத்துவமனைகள் பெரும்பாலும் நிரம்பி விட்டன. சில மருத்துவமனைகளில் புதிதாக வரும் நோயாளிகளை அட்மிட் செய்ய இடமில்லை என்று நகர சுகாதாரத்துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த வாரத்தில் மட்டும் Frankfurtஇல் 294 பேருக்கு ஃப்ளூ காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெர்லினிலும் இதேபோன்ற சூழ்நிலைதான் நிலவுகிறது. இங்கு பிப்ரவரி மாதத்தின் மூன்றாவது வாரத்தில் மட்டும் 600 பேருக்கு ஃப்ளூ காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் தலைநகரில் இதுவரை 2,650 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பொதுவாக குளிர் காலத்திற்குமுன் கொடுக்கப்படும் தடுப்பு ஊசிகள் இந்த முறை சரியாக செயல்படவில்லை.

இந்த மாதத்தின் முதல் பகுதியில் ஐரோப்பாவில் வெகு சில முதியோருக்கே ஃப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பு ஊசி போடப்பட்டதாக உலக சுகாதார மையம் குற்றம் சாட்டியிருந்தது.

ஐரோப்பிய நாடுகள் தடுப்பு ஊசி விகிதத்தை அதிகப்படுத்தவேண்டும் என்று வற்புறுத்துவதாக தெரிவித்த உலக சுகாதார மையத்தின் மண்டல இயக்குநரான Zsuzsanna Jakab, முதியவர்களில் மூன்றில் ஒருவருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பெரும்பாலான ஐரோப்பிய யூனியன் நாடுகளில் தற்போதைய தடுப்பூசி விகிதம் 30 முதல் 40 சதவிகிதமாகத்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்