சிரியா மீதான கூட்டுப்படை தாக்குதலில் ஜேர்மனி இணையாததன் காரணம் இதுதான்: வெளியான தகவல்

Report Print Arbin Arbin in ஜேர்மனி

சிரியாவுக்கு எதிரான கூட்டுப்படை தாக்குதலில் ஜேர்மனி கலந்து கொள்ளாதது அபாயகரமான தவறு என சர்வதேச நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஜேர்மனி தனித்து முடிவெடுத்ததன் காரணம் ரஷ்ய ஜனாதிபதி புடினாக இருக்கலாம் எனவும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஆசாத் அரசின் நச்சு வாயு தாக்குதலில் 70 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட நிலையில், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா நாடுகள் ஒன்றிணைந்து கடந்த வார இறுதியில் சிரியா மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டது.

குறித்த தாக்குதலை மேற்கத்திய நாடுகள் பலவும் வரவேற்றுள்ளன. அரேபிய நாடுகள் இதுவரை ஆதரித்தோ எதிர்த்தோ தகவல் வெளியிடவில்லை.

ஆனால் குறித்த தாக்குதல் திட்டத்தில் இணையாமல் ஜேர்மனி மெளனம் சாதித்தது. தாக்குதலுக்கு பின்னர் ஒப்புக்கு வரவேற்றது.

ஜேர்மனியின் இந்த முடிவுக்கு காரணம் ரஷ்யா மீதான பயமா எனவும் தற்போது கேள்வி எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் ஜேர்மனி அரசு ஒரு முதிர்ச்சியற்ற முடிவையே எடுத்துள்ளதாக அரசியல் ஆய்வாளரான Maximilian Terhalle காட்டமாக தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி ரஷ்யாவின் ஆதரவை இழக்க நேரிடுமோ என ஜேர்மனி அஞ்சுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது என கூறும் அவர்,

இந்த விவகாரத்தில் ஜேர்மனி ஒரு வரலாற்றுப் பிழையை செய்திருக்கிறது என்பது மட்டும் உண்மை என்றார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்