ஜேர்மனியில் குற்றங்களின் எண்ணிக்கை சரிவு: ஆய்வில் தகவல்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

2017ஆம் ஆண்டில் குற்றங்களின் எண்ணிக்கை பத்து சதவிகிதம் குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இருந்தாலும் சில வகை குற்றங்களின் எண்ணிக்கை இன்னும் ஏறு முகத்திலேயே உள்ளது.

1993க்குப் பிறகு 25 ஆண்டுகளில் இதுவரை இந்த அளவு குற்றங்கள் குறையவில்லை.

பொலிசார் வெளியிட்டுள்ள புள்ளிவிபரம் ஒன்றில் எத்தகைய குற்றங்கள் குறைந்துள்ளன, எத்தகைய குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்னும் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

2017 ஆம் ஆண்டில் 5.76 மில்லியன் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது முந்தைய ஆண்டைவிட 9.6 சதவிகிதம் குறைவு.

கடைகளில் கொள்ளை அடித்தல் 6.6 சதவிகிதம் குறைந்துள்ளது, அதாவது 353,384 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

பிக்பாக்கெட்களின் எண்ணிக்கை 22.7 சதவிகிதம் குறைந்துள்ளது, அதாவது 127,376 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

33,263 கார்களும் 300,006 சைக்கிள்களும் திருடப்பட்டுள்ளன, முறையே 8.6, 9.8 சதவிகிதம் குறைந்துள்ளது.

கொள்ளைச் சம்பவங்கள் 23 சதவிகிதம் குறைந்துள்ளன, அதாவது 116,540 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதே நேரத்தில் கொலைகள் 3.2 சதவிகிதம் அதிகரித்துள்ளன, அதாவது 785 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் 9.2 சதவிகிதம் அதிகரித்துள்ளன, அதாவது 330,580 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சிறுவர் ஆபாச படங்கள் தொடர்பான குற்றங்கள் 14.5 சதவிகிதம் அதிகரித்துள்ளன, அதாவது 6,512 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஜேர்மனி பொலிஸ் அதிகாரிகளின் சங்கத்தின் தலைவரான ஆலிவர் மால்ச்சோவ் கூறும்போது குற்றங்கள் குறைந்ததற்கான காரணங்களில் ஒன்று முந்தைய ஆண்டைவிட குறைவான எண்ணிக்கையிலான புகலிடம் கோருவோர் 2017 இல் ஜேர்மனிக்கு வந்தது என்கிறார்.

ஆனால் புலம்பெயர்ந்தோரால்தான் குற்றங்கள் பெருகுகின்றன என்னும் பொருளில் அவர் அவ்வாறு கூறவில்லை.

அவர் கூறியதன் பொருள் என்னவென்றால் நாட்டில் அதிக மக்கள் இருக்கும்போது குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

சிரிய மற்றும் ஈராக் அகதிகள் ஜேர்மனியில் வாழும் வாய்ப்பை இழந்து விட விரும்பாததால் அதிக குற்றங்களில் ஈடுபடுவதில்லை.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், ஜேர்மனியில் மிக மோசமான சட்ட ஒழுங்கு காணப்படும் இடங்கள் உள்ளதாகவும், அங்கு செல்ல பொலிஸார் கூட அஞ்சுவதாகவும் ஜேர்மானியரில் பாதிப்பேர் நம்புகின்றனர்.

ஜேர்மானியர்களைவிட புலம்பெயர்ந்தோர் குறைந்த அளவிலேயே குற்றங்களில் ஈடுபடுவதாக பொலிசாரின் அறிக்கை தெரிவித்தாலும், குற்றங்கள் அதிகரிப்பதற்கு அகதிகளே காரணம் என பெரும்பாலும் குற்றம் சாட்டப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாகவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers