பெற்றோருக்கு தெரியாமல் காரினை எடுத்து ஓட்டிய சிறுவன்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
465Shares
465Shares
lankasrimarket.com

ஜேர்மனியின் Recklinghausen நகரில் 9 வயது சிறுவன் தனது பெற்றோரின் காரினை எடுத்துக்கொண்டு உள்ளூர்பகுதியில் பயணிக்கையில் பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டான்.

கார் தானியங்கி கார் என்பதால் காரின் gears - ஐ மாற்றவோ, கிளட்ச் இயக்கவோ இல்லை. இதனால் இச்சிறுவனால் காரை ஒட்ட முடிந்துள்ளது.

விசாரணையில், பெற்றோர் குளியலறையில் இருந்த நேரத்தில் இச்சிறுவன் காரின் சாவியை எடுத்துக்கொண்டு வந்து இவ்வாறு செய்துள்ளான். அதுவும் அதிகாலை 2 மணி என்பதால் விபத்து எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது என கூறிய பொலிசார், அச்சிறுவனின் பெற்றோரை எச்சரித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்