இவன் யூத இனத்தை சேர்ந்தவன்! தொப்பி அணிந்த நபருக்கு நேர்ந்த கதி

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனில் kippah அணிந்த சிரிய நாட்டை சேர்ந்த நபரை இரண்டு நபர்கள் தாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெர்லினில் 19 வயதுடைய சிரிய நபர் தலையில் kippah அணிந்துள்ளார். இதனைப்பார்த்த இரண்டு நபர்கள் அவரை முரட்டுத்தனமாக தாக்கியுள்ளனர். மேலும் தலைப்பில் இப்படி தொப்பி அணிந்திருப்பதால் இவன் யூத இனத்தை சேர்ந்தவன் என கூறி சத்தம்போட்டுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் கூறியதாவது, இந்த தொப்பியை எனது நண்பன் எனக்கு வாங்கிகொடுத்தான்.இதை வெளியில் அணிந்துசென்றால் ஆபத்து என என்னை எச்சரித்தான். இருப்பினும் அதனை கேட்காமல் அணிந்துசென்ற எனக்கு இந்த ஆபத்து நடந்துள்ளது என கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers