பெற்றோரின் கவனக்குறைவால் ஐந்து வயது குழந்தைக்கு ஏற்பட்ட பிரச்சினை

Report Print Balamanuvelan in ஜேர்மனி

விடுமுறைக்காக வெளிநாடு சென்று திரும்பிய பெற்றோர் கவனக்குறைவால் ஐந்து வயது குழந்தையை விமான நிலையத்திலேயே தவற விட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Stuttgart விமான நிலையத்தில் ஐந்து வயது குழந்தை ஒன்று தனியாக அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பதைக் கண்ட விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், அந்த குழந்தையை மீட்டு உள்ளூர் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

விமான நிலைய அதிகாரிகள் குழந்தை ஒன்று தங்களிடம் இருப்பதாகவும் அதன் பெற்றோர் வந்து குழந்தையை அழைத்துச் செல்லுமாறு பலமுறை அறிவிப்பு செய்தும் எந்த பலனுமில்லை.

சிறிது நேரத்திற்குப் பின் விமான நிலையத்திற்கு போன் செய்த ஒரு பெண், தங்கள் மகளை விமான நிலையத்தில் தவறவிட்டுவிட்டதாகவும், அவளது தந்தை அவளை அழைத்துச் செல்ல வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

பின்னர் விசாரித்ததில், விமான நிலையம் வந்த பெற்றோர் இருவரும் வெவ்வேறு கார்களின் வீடு திரும்பியதாகவும், ஒவ்வொருவரும், குழந்தை மற்றவரிடம் இருப்பதாக எண்ணிக் கொண்டதும் தெரியவந்தது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers