Brexitஆல் மருத்துவப் பொருட்களுக்கு தட்டுப்பாடு: ஜேர்மன் அமைச்சர் எச்சரிக்கை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

சரியான ஒப்பந்தங்கள் இன்றி நிகழும் பிரெக்சிட்டால் ஜேர்மனியில் மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை வரலாம் என ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.

சரியான ஒப்பந்தங்கள் இன்றி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் நிலையில், ஏப்ரல் மாதத்திற்குள்ளாகவே, நோயாளிகளுக்கு இரத்தம் ஏற்றுவதற்கு பயன்படும் முக்கிய பொருட்கள், அதாவது இரத்த தயாரிப்புகள் உட்பட பல்லாயிரக்கணக்கான பொருட்கள் கிடைக்காமல் போகும் நிலை ஏற்படலாம் என ஜேர்மனியின் சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahn ஐரோப்பிய ஒன்றியத்தை எச்சரித்துள்ளார்.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் பட்சத்தில், பல பொருட்களுக்கு உரிமப் பிரச்சினைகள் (licensing problems) ஏற்படும் என்பதால், இரண்டு பக்கத்திலுமே பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.

முக்கியமாக, பேஸ் மேக்கர்கள், இம்ப்ளாண்ட்கள் மற்றும் இரத்த உப பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும்.

இதனால் இந்த பிரச்சினைகளை சந்திப்பதற்காக ஒரு பொதுவான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட வேண்டும் என்கிறார் அவர்.

இரத்ததானம் செய்யப்படும் நேரத்தில் ஹெச்.ஐ.வி போன்ற நோய்க்கிருமிகள் அந்த இரத்தத்தில் உள்ளனவா என்பதை பரிசோதிக்க உதவும் சோதனை உபகரணங்களுக்கு (in-vitro diagnostic products) தட்டுப்பாடு ஏற்பட்டால் அதை சமாளிப்பது மிகவும் கடினம் என்கிறார் அவர்.

இது ஒருபுறமிருக்க, இன்னொரு பக்கம் பிரித்தானியாவும் மருந்துகள் பற்றாக்குறை ஏற்படலாம் என்ற அச்சத்தின் பேரில், மருந்துகளை ஸ்டாக் செய்யத் தொடங்கியுள்ளது.

பிரித்தானிய அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளில் முக்கால் பாகம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers