உங்களால் தொடர்ந்து 60 நாட்கள் படுத்திருக்க முடியுமா? பரிசு காத்திருக்கிறது!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

உங்களால் தொடர்ந்து 60 நாட்களுக்கு ஒரே இடத்தில் படுத்திருக்க முடியுமென்றால், உங்களுக்கு 16,500 யூரோக்கள் தருவதற்கு ஜேர்மன் விண்வெளி அறிவியலாளர்கள் காத்திருக்கிறார்கள்.

சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் பயணிக்கும் விண்வெளி வீரர்கள் மீது புவியீர்ப்பு தன்மையற்ற நிலை என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறிவதற்காக செய்யப்படும் இந்த ஆய்வில் 12 ஆண்களும் 12 பெண்களும் பங்கேற்க இருக்கிறார்கள்.

அவர்கள் தொடர்ந்து இரண்டு மாதங்கள் படுக்கையிலேயே படுத்திருக்க வேண்டும்.

சாப்பாடு, தூக்கம், குளிப்பது ஏன் பாத்ரூம் போவதுகூட படுக்கையில்தான்.

இன்னும் ஒரு விடயம், அந்த படுக்கைகள் கால் பாகம் உயர்ந்தும் தலை பாகம் ஆறு டிகிரிகளுக்கு தாழ்ந்தும் இருக்கும் வகையிலும் அமைக்கப்பட்டிருக்கும்.

புவியீர்ப்பு தன்மையற்ற நிலையில், விண்வெளி வீரர்களின் உடலில் உள்ள திரவங்கள் இடம்பெயர்தலை சோதிக்கும் வகையில் அந்த படுக்கைகள் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது தொடர்ந்து தன்னார்வலர்களை அறிவியலாளர்கள் தேடி வருகின்றனர்.

முக்கியமாக பெண்கள் தேவைப்படுகிறார்கள்.

ஒரே ஒரு கண்டிஷன்தான், இந்த ஆய்வில் கலந்து கொள்பவர்களுக்கு நன்றாக ஜேர்மன் மொழி பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

எடையற்ற சூழலில் மிக நீண்ட காலம் இருப்பதால், எலும்பு மற்றும் தசை தேய்மானம், இதய செயல்பாடு குறைவு ஆகியவை ஏற்படுவதோடு உடலிலுள்ள திரவங்கள் உடலின் மேல் பாகத்துக்கு நகரும் பிரச்சினையும் ஏற்படலாம்.

களைப்பு, சோர்வு, முகம் வீங்குதல், காது பிரச்சினைகள், நோயெதிர்ப்புச் சக்தியில் குறைபாடு மற்றும் முதுகு வலியும் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்