போக்குவரத்து யூனியன் வேலை நிறுத்தம்: தத்தளிக்கும் ஜேர்மன் தலைநகர்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியின் பொதுப்போக்குவரத்து யூனியன் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதையடுத்து பெர்லினில் விமானங்களை பிடிப்பதற்காக புறப்பட்டவர்கள் உட்பட ஏராளமானோர் கடும் பாதிப்புக்குள்ளாயினர்.

பெரும்பாலான சுரங்க ரயில்கள், ட்ராம்கள் மற்றும் பேருந்துகள் 'Berliner Verkehrsbetriebe' (BVG) யூனியனின் வேலை நிறுத்தம் காரணமாக இயங்கவில்லை. இன்று அதிகாலை தொடங்கிய இந்த வேலை நிறுத்தம் இன்று முழுவதும் நீடிக்கும் என்று தெரிகிறது.

பேருந்துகளும் ட்ராம்களும் நிலையங்களிலேயே நிறுத்தப்பட்டதோடு, சுரங்க ரயில் நிலையங்களின் கதவுகளும் பூட்டப்பட்டிருந்ததையடுத்து மக்கள் வேறு வழிகளைபயன்படுத்தும் கட்டாயச் சூழலுக்கு உள்ளாகினர்.

விமான நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் அதிகமாக பாதிக்கப்பட்டனர், முக்கியமாக Tegelக்கு புறப்பட்ட பயணிகள்.

ஏனென்றால் Tegelக்கு செல்ல BVG பொதுப்போக்குவரத்தை விட்டால் வேறு வழியில்லை. ஆனால் பலர் பொடி நடையாகவே Tegelக்கு புறப்பட்டனர்.

அப்படி நடந்து செல்ல 40 நிமிடங்கள் ஆகும் என பெர்லின் விமான சேவையே அறிவித்திருந்தது.

பலர் வெயிலில் நடந்தும், சைக்கிளிலும், சிலர் ஓடியும் கூட பயணப்பட்டனர். ட்விட்டர் பயனர் ஒருவர், வேலைக்கு சென்று கொண்டே உடற்பயிற்சியும் செய்கிறோம், என்று ட்வீட்டினார்.

இன்னொரு பக்கம், ஏராளமானோர் கார்களுக்குத் தாவ, திடீரென போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்