29 பேர் பலியான பயங்கரமான பேருந்து விபத்து: உயிர்தப்பியவர்களை நாட்டுக்கு அழைத்து வர விமானம் அனுப்பிய ஜேர்மன் அரசு

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

போர்ச்சுகலின் வடகிழக்கு பகுதியில் உள்ள தீவு மடெய்ராவில் விபத்துக்குள்ளாகிய சிகிச்சை பெற்று வரும் ஜேர்மனியர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு இராணுவ மீட்பு விமானம் அனுப்பப்பட்டுள்ளது.

கடற்கரை நகரமான கனிகோவில் உள்ள மலைப்பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

29 ஜேர்மனியர்கள் பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், காயமடைந்த 27 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், விபத்துக்கான காரணம் தற்போது வரை அறியப்படவில்லை, இதற்கிடையில் தான் உயிரோடு இருக்கும் ஜேர்மனியர்களை நாட்டுக்கு அழைத்து வர Bundeswehr என்ற ஜேர்மன் இராணுவ விமானம் அனுப்பபட்டுள்ளது.

பேருந்து ஓட்டுநர் வாகனத்தை நிறுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது நிலைதடுமாறி வாகனத்தை மோதியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன, மேலும் உயிர்தப்பிய ஜேர்மனியை சேர்ந்த நபர் கூறியதாவது, விபத்துக்கான காரணத்தை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை, அந்த அளவுக்கு இந்த விபத்து பயங்கரமாக இருந்தது என கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers