ஜேர்மன் நெடுஞ்சாலையில் எரிந்து சாம்பலான சுற்றுலா பேருந்து!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

இன்று காலை ஜேர்மன் நெடுஞ்சாலை ஒன்றில் சுற்றுலாப்பேருந்து ஒன்றில் தீப்பற்றியுள்ளது. Pforzheim நகரில் அந்த பேருந்து தீப்பற்றியது.

தீப்பற்றிய அந்த பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது.

ஆனால் தீப்பற்றியவுடன் அந்த பேருந்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த தீ ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

எஞ்சினிலிருந்து புகை வருவதைக் கவனித்த பேருந்தின் சாரதி, பேருந்தை சாலை ஓரமாக நிறுத்தினார்.

தனது சக ஊழியர் ஒருவர் மற்றும் பேருந்திலிருந்த ஆறு பயணிகளுடன் அவர் சரியான நேரத்தில் பேருந்திலிருந்து வெளியேறினார்.

அதிகாலை ஒரு மணிக்கு அந்த தீ துவங்கியதாக தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட பயணிகள் ஆறு பேரும் வேறொரு பேருந்தில் பத்திரமாக ஏற்றி Karlsruheக்கு அனுப்பப்பட்டனர்.

இந்த சம்பவம் காரணமாக Karlsruhe நோக்கி செல்லும் நெடுஞ்சாலை பல மணி நேரங்களுக்கு மூடப்பட்டு, பின்னர் காலையில் திறந்துவிடப்பட்டது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்