ஜேர்மனியில் கொலையாளி ஒருவருக்கு ஆதரவாக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

இரண்டு பேரை கொலை செய்த குற்றவாளி ஒருவருக்கு ஆதரவாக ஜேர்மன் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

கரீபியன் பகுதியில் Apollonia என்ற கப்பலில் பயணித்தபோது, அந்த நபர் ஒரு சண்டையில் இருவரை சுட்டுக்கொன்றார், ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு ஒரு புத்தகமும் ஒரு ஆவணப்படமும் வெளியாகின. 1999ஆம் ஆண்டு Der Spiegel என்னும் பத்திரிகை அந்த நபரின் முழுப்பெயர் முதலான விவரங்களை வெளியிட்டு வழக்கு தொடர்பான மூன்று அறிக்கைகளை வெளியிட்டது.

இந்த விடயம் அந்த நபருக்கு தெரியவரவே, அவற்றை இணையத்திலிருந்து அகற்றவேண்டுமென அவர் கோரினார்.

தனது குற்றத்திலிருந்து தனது குடும்பப் பெயர் அகற்றப்படவேண்டும் என தான் விரும்புவதாக அவர் தெரிவித்திருந்தார்.

ஆகவே இந்த அறிக்கைகள் தனது உரிமைகளையும் , தனது ஆளுமையை மேம்படுத்தும் திறனையும் மீறுவதாக கூறியிருந்தார்.

2010ஆம் ஆண்டு ஃபெடரல் நீதிமன்றம் ஒன்று அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. ஆனால் அரசியலமைப்பு நீதிமன்றம் அந்த நபருக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.

அது அந்த ஜேர்மானியரின் பெயரை ஒன்லைன் தேடுதல் இயந்திரத்திலிருந்து அகற்றுவதற்கு அவருக்கு உரிமை உள்ளது என தீர்ப்பளித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்