புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் காலடியில் பூங்கொத்தை வீசியெறிந்த பெண்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் கட்சித்தலைவர் ஒருவர் புதிதாக பதவியேற்றுள்ள பிரதமரின் காலடியில் பூங்கொத்து ஒன்றை வீசியெறிந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஜேர்மனியின் Thuringiaவில் புதிதாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள Thomas Kemmerich என்பவருக்கு பாராட்டு விழா நடந்துகொண்டிருந்தது.

பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அவருக்கு கை குலுக்கியும் பூங்கொத்து கொடுத்தும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, The Left (Germany) கட்சியின் தலைவரான Susanne Hennig-Wellsow என்ற பெண்ணும் பிரதமரை நோக்கி வந்தார்.

கையில் பூங்கொத்துடன் வந்த Susanne, அதை பிரதமரின் கையில் கொடுக்காமல், அவரது காலடியில் வீசிவிட்டுச் சென்றார்.

யாரும் எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் நிற்க, பிரதமரும் கைகளைப் பிசைந்தபடி நின்றார்.

அடுத்து வந்த அரசியல்வாதிகள் எதுவுமே நடவாததுபோல் பிரதமருடன் கைகுலுக்கிச் சென்றனர்.

பிரதமர், தேர்தலில் ஜெயிப்பதற்கு வலது சாரியினரை சார்ந்திருந்ததையடுத்தே, தனது எதிர்ப்பைக் காட்ட Susanne இவ்வாறு செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

independent

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers