பிரித்தானிய குழந்தை காணாமல் போனதற்கு அவளது பெற்றோரே காரணம்: ஜேர்மன் அதிகாரி கூறும் தகவல்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

போர்ச்சுகல்லில் பிரித்தானிய குழந்தை காணாமல் போனதற்கு அவ்லது பெற்றோர்தான் காரணம் என போர்ச்சுகீசிய பொலிசார் இன்னமும் எண்ணுகிறார்கள் என்று கூறியுள்ளார் ஜேர்மன் நீதித்துறை அதிகாரி ஒருவர்.

பிரித்தானியாவைச் சேர்ந்த கேட் மற்றும் கெரி மெக்கேன், தங்கள் பிள்ளைகளுடன் போர்ச்சுகல்லுக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.

அப்போது தங்கள் குழந்தைகளை வாடகைக்கு எடுத்திருந்த ஒரு வீட்டில் தூங்கவைத்துவிட்டு, அருகிலுள்ள உணவகம் ஒன்றிற்கு நண்பர்களுடன் உணவருந்தச் சென்றிருக்கிறார்கள் அவர்கள்.

அப்போது யாரோ ஒரு நபர் அவர்களது குழந்தைகளில் ஒருத்தியான மேட்லின் மெக்கேனை படுக்கையிலிருந்து தூக்கிச் சென்றுவிட்டான்.

சுமார் 13 ஆண்டுகளாகியும் மேட்லின் கிடைக்கவில்லை. அவளை கடத்தி கொலை செய்ததாக Christian Brueckner என்பவன் மீது பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மற்றொரு கோர குற்றத்திற்காக ஜேர்மன் சிறையிலிருக்கிறான் Brueckner. அவனாக குழந்தை குறித்து ஏதாவது சொல்வானா என பொலிசார் அவனை தீவிர்மாக கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையில், அவன் போர்ச்சுகல்லில் இருக்கும்போதே அவனை சரியாக விசாரிக்காமல் தப்ப விட்டதற்காக போர்ச்சுகல் பொலிசார் மீது கடும் கண்டனம் எழுந்துள்ளது.

ஆனால், போர்ச்சுகல் பொலிசாரோ, குழந்தை காணாமல் போனதற்கு அவளது பெற்றோரின் கவனக்குறைவே காரணம் என நம்புவதாக ஜேர்மன் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர்களுடன் இணைந்து விசாரணையை தொடர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்