பிரித்தானிய சிறுமி மாயமான வழக்கு: ஜேர்மன் பொலிசாரின் DNA பரிசோதனை கோரிக்கையை மறுத்த போர்ச்சுகல் பொலிசார்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பிரித்தானிய சிறுமி போர்ச்சுகல்லில் மாயமான வழக்கில் இரு நாட்டு பொலிசாருக்குள் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

பிரித்தானிய தம்பதியரான கேட், கெரி மெக்கேன் தம்பதியர் போர்ச்சுகல்லுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது தங்கள் மகள் மேட்லினை தவறவிட்டனர்.

ஜேர்மானிய பாலியல் குற்றவாளியான Christian Brueckner, மேட்லினை கடத்தியிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பாக, பிரித்தானியா, ஜேர்மனி மற்றும் போர்ச்சுகல் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், போர்ச்சுகல் பொலிசாருக்கும் ஜேர்மன் பொலிசாருக்கும் இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது.

ஏற்கனவே போர்ச்சுகல் பொலிசார் Bruecknerஐ சரியாக விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட, பின்னர் அவர்கள் அவனை விசாரிக்கவேயில்லை என்ற அதிரவைக்கும் உண்மை வெளியானது.

தற்போது, ஜேர்மன் பொலிசார் போர்ச்சுகல்லில் மேட்லின் தூங்கிக்கொண்டிருந்த அறையில் இருந்த தலையணையில் குற்றவாளியின் DNA இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

ஆகவே, மீண்டும் அந்த தலையணையை சோதிக்கும்படி அவர்கள் போர்ச்சுகல் பொலிசாரை கேட்டுக்கொள்ள, போர்ச்சுகல் பொலிசாரோ ஜேர்மன் பொலிசாரின் கோரிக்கை தங்களை அவமதிப்பதாக கருதுகிறார்கள்.

நாங்கள் ஏற்கனவே 2007இல் DNA பரிசோதனை செய்துவிட்டோம், இப்போது ஜேர்மன் பொலிசார் அதே தலையணையில் இருந்து மாதிரி எடுத்து மீண்டும் DNA சோதனை செய்யவிரும்புகிறார்கள்.

அப்படியானால், நாங்கள் சரியாக சோதனை செய்யவில்லையா, எங்கள் ஆய்வகங்கள் ஜேர்மன் ஆய்வகங்களைவிட மோசமானவையா என்கிறார்கள் போர்ச்சுகல் பொலிசார்.

ஜேர்மன் பொலிசாரோ, நீங்கள் ஆய்வு செய்தது 2007இல், இப்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு DNA பரிசோதனையில் பல முன்னேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஏன் மீண்டும் பரிசோதனை செய்யக்கூடாது என்கிறார்கள்.

குற்றவாளியை ஒழுங்காக கண்டுபிடித்தார்களோ என்னவோ, இப்படியே பொலிசாருக்குள் மோதல் போக்கிலேயே வழக்கு தொடர்கிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்