கனடாவுக்கு ஆதரவாக பேசிய ஜேர்மன் தூதர்... பதிலுக்கு சீனா பயன்படுத்தியுள்ள மோசமான வார்த்தைகள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
328Shares

சீனா பிடித்துவைத்திருக்கும் கனேடியர்களை கிறிஸ்துமஸை முன்னிட்டு விடுவிக்கவேண்டும் என ஜேர்மன் தூதர் கோரியதைத் தொடர்ந்து அவரை தகாத வார்த்தைகளால் விமர்சித்துள்ளது சீனா!

ஐக்கிய நாடுகள் சபைக்கான ஜேர்மன் தூதராக 2017 முதல் பொறுப்பு வகிப்பவர் Christoph Heusgen.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றிய Heusgen, சீனா பிடித்துவைத்திருக்கும் இரண்டு கனேடியர்களை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விடுவிக்குமாறு சீனாவை கேட்டுக்கொண்டார்.

ஆனால், அவரது கோரிக்கைக்கும் அநாகரீகமான முறையில் பதிலளித்துள்ளார் சீன தூதர். ஐக்கிய நாடுகளுக்கான சீனாவின் துணை தூதரான Geng Shuang, நல்ல வேளை தொல்லை ஒழிந்தது என்று கூறி Heusgenஐ அவமதித்துள்ளார்.

அத்துடன், Huesgen பாதுகாப்பு கவுன்சிலில் இருப்பதை பயன்படுத்திக்கொண்டு மற்ற நாடுகளை துன்புறுத்துகிறார் என்றும், பணிச் சூழலை கெடுக்கிறார் என்றும் அவர் இல்லாமல் 2021இல் பொறுப்புகளை நல்ல முறையில் நிறைவேற்ற முடியும் என்றும் கூறியுள்ளார் Shuang.

அதாவது, 40 ஆண்டுகள் தூதராக பணியாற்றிய Heusgen இந்த ஆண்டுடன் ஓய்வு பெறுகிறார், அதை பொருள் படுத்தித்தான் தொல்லை ஒழிந்தது என்று கூறியுள்ளார் Shuang என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்