Food Poison- கவனத்தில் கொள்ள வேண்டிய பயனுள்ள குறிப்புகள்

Report Print Meenakshi in ஆரோக்கியம்

பாக்டீரியாக்கள் எளிதில் உருவாகி பரவுவதால் இந்த கோடைகாலத்தில் தான் அதிகளவு ஃபுட் பாய்சனானது ஏற்படுகிறது.

ஃப்ரிட்ஜ் நாம் சுத்தமாக வைத்திருக்காவிட்டால் அதிலுள்ள உணவு பொருள்கள், காய்கறிகளில் நோயினை உண்டாக்கும் கிருமிகளானது பரவி ஃபுட் பாய்சன்(Food poison) உண்டாகிறது.

ஃபிரிட்ஜ் மற்றும் சமையலறை மூலமாக பாக்டீரியாக்கள் பரவுவதை தவிர்க்க சில வழிமுறைகளை பின்பற்றுவது அவசியமாகும்.

கோடைக்காலத்தில் துரித உணவுகளை கட்டாயம் தவிர்க்கவேண்டும். அதிக வெப்பத்தில் பாக்டீரியாக்களானது வேகமாக பரவும்.

ஃப்ளீச் மற்றும் தண்ணீரை உபயோகித்து வாரம் ஒருமுறை ஃப்ரிட்ஜினை துடைப்பது அவசியமாகும்.

சாப்பிடும் முன்னரும் சமைக்கும் முன்னரும் காய்கறிகள் மற்றும் பழங்களை சுத்தமாக கழுவி உபயோகிக்க வேண்டும்.

சமையலறையில் பயன்படுத்தும் துணிகளை சரியான இடைவெளியில் துவைக்க வேண்டும். இதன் மூலம் பூஞ்சைகள், கிருமிகள் உண்டாவது தடுக்கப்படும்.

இறைச்சி போன்றவற்றினை ஃபிரிட்ஜில் வைக்கும்போது கவரில் போட்டு ஃபிரிட்ஜின் அடிப்பகுதியில் வைப்பதன் மூலம் கிருமிகள் பரவாது. இறைச்சியுடன் மற்ற உணவுகள் அல்லது காய்கறிகள் போன்றவற்றினை வைக்கக்கூடாது.

38-40 degrees F-ல் ஃபிரிட்ஜை வைப்பதன் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் ப்ரஷ்(Fresh) -ஆக இருக்கும்.

காய்கறிகள் மற்றும் இறைச்சி போன்றவற்றினை வெட்டுவதற்கு தனித்தனி பலகைகளை உபயோகப்படுத்த வேண்டும். இறைச்சியினை நன்கு கழுவி சுத்தப்படுத்திய பின்னரே பயன்படுத்தவேண்டும்.

அளவுக்கு அதிகமான பொருள்களை ஃபிரிட்ஜில் வைப்பதால் காற்றோட்டமின்றி கிருமிகள் எளிதாக உருவாகின்றன. பொருள்கள் காலாவதியாகும் திகதியினை பார்த்து பயன்படுத்த வேண்டும்.

முட்டைகள் உடைந்துவிடாமல் பத்திரமாக வைக்கவேண்டும். இறைச்சி, முட்டை, பால் உணவு பொருள்களை நன்கு சமைத்து உண்பது அவசியம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments