பட்டைதூள், தேனில் ஒரு ஸ்பூன் போதும்: இந்த நோய்கள் வராது

Report Print Printha in ஆரோக்கியம்

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 ஸ்பூன் பட்டைத்தூள் மற்றும் 1 ஸ்பூன் தேன் கலந்து தொடர்ந்து குடிக்க வேண்டும். இதனால் பல நோய்களின் பாதிப்புகள் வராமல் தடுக்கலாம்.

நன்மைகள்
  • இதயத்தின் தசைகள் வலிமையாகி, கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கிறது.
  • மூட்டு நோய் உள்ளவர்கள் காலை மற்றும் மாலையில் பட்டைப்பொடி, தேன் கலந்த நீரை குடிப்பதால் மூட்டு நோய் விரைவில் குணமாகும்.
  • ஒரு கப் தண்ணீருடன் 2 ஸ்பூன் தேன், 3 டீஸ்பூன் இலவங்கப் பட்டை பொடியும் கலந்து சாப்பிட கொலஸ்ட்ரால் அளவு குறையும்.
  • தேனை சுடு நீரில் கலந்து வெதுவெதுப்பாக்கி அதனுடன் இலவங்கப் பட்டை பொடியை சேர்த்து 3 நாளைக்கு சாப்பிட்டு வர கடுமையான ஜலதோஷம், இருமல், சைனஸ் தொல்லைகள், வயிற்று வலி, அல்சர் போன்றவை நீங்கும்.
  • தினசரி தேனையும், இலவங்கப் பட்டைப் பொடியையும் சாப்பிட்டு வந்தால் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, பல நோய்களின் தாக்கம் குறையும்.
  • 2 ஸ்பூன் தேனை பட்டைத் தூளுடன் சேர்த்து சாப்பிட்டு வர அஜீரணக்கோளாறு போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
  • 1 ஸ்பூன் இலவங்கப் பட்டை பொடியை ஒரு கப் நீரில் கொதிக்க வைத்து அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால் சரும சுருக்கங்கள் வருவதை தடுக்கும்.
  • 3 ஸ்பூன் தேனுடன் ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை குழைத்து பேஸ்ட் செய்து அதை முகப் பருக்களின் மீது தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் பருக்கள் மறையும்.
  • 1 கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் தேன் மற்றும் இலவங்கப் பட்டைப் பொடியை கலந்து அதை காலை உணவிற்கு முன் தொடர்ந்து குடித்து வந்தால் நம் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்துவிடும்.
  • தேன் மற்றும் பட்டை கலந்த கலவை இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்தி, உடலில் குளுக்கோஸ் அளவை சீராக்க உதவுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்