உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? இந்த விதை மட்டும் சாப்பிடுங்க!

Report Print Jayapradha in ஆரோக்கியம்

நீர்ச்சத்து நிரம்பியுள்ள பழங்களில் தர்பூசணிக்கு அடுத்து முலாம் பழம் உள்ளது. இந்த முலாம் பழத்தை அப்படியே சாப்பிடுவதை விட ஜூஸ் போட்டு குடித்தால் அற்புத மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.

பெரும்பாலும் முலாம் பழத்தை சாப்பிடும் போது, அதன் விதைகளைத் தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் அந்த விதையில் ஏராளமான சத்துக்களும், நன்மைகளும் நிறைந்துள்ளது.

உடல் எடை குறைக்க எப்படி சாப்பிட வேண்டும்?

  • முதலில் முலாம் பழத்தில் இருந்து விதைகளை பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் அதை நீரில் கழுவிக் கொண்டு பின்பு அதை வெயிலில் போட்டு நன்கு உலர்த்த வேண்டும்.

  • முலாம் பழ விதைகள் நன்கு வெயிலில் உலர்த்த பின், அதை அப்படியே நீங்கள் சாப்பிடலாம். குறிப்பாக இந்த விதைகள் ஸ்நாக்ஸாக பகல் நேரத்தில் சாப்பிட ஏற்றதாக இருக்கும்.

  • மேலும் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் முலாம் பழ விதைகளை அன்றாடம் ஒரு கையளவு சாப்பிட்டால், அது அடிக்கடி பசி ஏற்படும் உணர்வைத் தடுத்து, கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டத்தைக் குறைத்து, உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கும்.

முலாம் பழ விதையின் நன்மைகள்

  • முலாம் பழ விதைகளை அடிக்கடி ஸ்நாக்ஸாக சாப்பிட்டால், அதில் உள்ள புரோட்டீன்கள், நம் உடலில் புரோட்டீன் குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது.

  • முலாம் பழ விதைகளை தினமும் உட்கொண்டு வந்தால், கண் பார்வை மேம்படும். ஏனெனில் இந்த விதையில் கண்களுக்கு தேவையான விட்டமின்கள் அனைத்தும் உள்ளது.

  • முலாம் பழ விதைகள் எலும்புகள் மற்றும் அதன் அடர்த்தியை மேம்படுத்தி, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

  • முலாம் பழ விதைகள் சர்க்கரை நோயை எதிர்த்துப் போராடி, இன்சுலின் சுரப்பையும் சீராக்கி, சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.

  • முலாம் பழ விதைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்குகிறது.

  • நெஞ்சு சளி மற்றும் உடலைத் தாக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராடி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கிறது.

  • முலாம் பழ விதைகளை குழந்தைகளுக்கு தினமும் சிறிது கொடுத்தால், அவர்களது வயிற்றில் உள்ள புழுக்களை அழித்து, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்