தாங்க முடியாத தலைவலியா? இதோ சிறந்த நிவாரணம்

Report Print Kavitha in ஆரோக்கியம்

தலைவலி நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கின்றது.

பொதுவாக தலைப்பகுதியில் இருக்கும் ரத்த நாளங்களில், ரத்த ஓட்டம் சீரற்று இருப்பதன் காரணமாகவே, தலைவலி ஏற்படுகிறது.

இதற்காக நாம் நிறைய மாத்திரைகள், வீட்டு மருந்துகள் என்று பல வலிநிவாரணிகளை எடுத்துக் கொண்டாலும், அவை மீண்டும் மீண்டும் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

இதிலிருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தினாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

  • ஒரு பௌலில் எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். பின் அதில் நீரை சேர்த்து, அத்துடன் கல் உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் இந்த பானத்தை பருகுங்கள்.
  • இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாற்றினை சரிசம அளவில் ஒன்றாக கலந்து குடிக்கலாம் அல்லது இஞ்சி பவுடரை நீரில் கலந்து பேஸ்ட் செய்து நெற்றியில் தடவுவதன் மூலமும் நொடியில் தலைவலியில் இருந்து உடனடியாக விடுபடலாம்.
  • 3 துளிகள் புதினா எண்ணெயுடன் 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, நெற்றியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்வதன் மூலம், தலைவலியில் இருந்து விரைவில் விடுபடலாம்.
  • தலைவலியில் இருந்து பட்டையும் உடனடி நிவாரணம் அளிக்கும். அதற்கு பட்டை பொடியை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, நெற்றியில் தடவி 30 நிமிடம் உறங்குங்கள். பின் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இதனால் தலைவலி பறந்தோடிடும்.
  • 2 துளி கிராம்பு எண்ணெயுடன் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, அத்துடன் சிறிது கல் உப்பையும் சேர்த்து கலந்து, பின் அந்த கலவையால் நெற்றிப் பகுதியை மசாஜ் செய்யுங்கள். இதனால் தலைவலி விரைவில் போய்விடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்