மூன்று நாட்களில் தொப்பை குறைக்க தினமும் 3 முறை இந்த பானத்தை குடியுங்கள்

Report Print Nalini in ஆரோக்கியம்
4190Shares

ஏராளமானோர் உடல் பருமன் பிரச்சினையால் கஷ்டப்பட்டு வருகின்றனர். சிலர் இந்த உடல் பருமன் பிரச்சினையை சமாளிப்பதற்கு தினமும் உடற்பயிற்சி மற்றும் வேறு சில செயல்களை பின்பற்றி வருகின்றார்கள்.

ஒருவரது உடல் பருமன் அதிகரிப்பதற்கு அல்லது குறைவாக இருப்பதற்கு மரபணுக்கள் மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் தான் காரணமாக அமைகின்றன.

அதோடு உடல் எடை அதிகரிப்பதற்கு உடலுழைப்பு இல்லாமை, மோசமான டயட் அல்லது உணவுப் பழக்கங்கள், தூக்கமின்மை, அளவுக்கு அதிகமான மன அழுத்தம் மற்றும் குறிப்பிட்ட மருந்துகள் போன்ற காரணங்களாலும் உடல் பருமன் கூடுகின்றன.

ஒருவரது உடல் எடை அளவுக்கு அதிகமாக இருந்தால், அது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளான உயர் கொலஸ்ட்ரால், டைப்-2 சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம், குறட்டை, கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ் போன்றவற்றால் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

அது மட்டும் இல்லை, குறிப்பாக பெண்களுக்கு தொப்பை அதிகமாக உள்ளதாலும், உடல் எடை பிரச்சினையாலும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

தொப்பையை குறைக்க

இஞ்சி டீ:

  • இஞ்சி உடல் எடை குறைவதை ஊக்குவிக்கிறது. அதுவும் இது உடலின் வெப்பநிலையை அதிகரித்து, உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, தேவையற்ற கொழுப்புக்களை கரைப்பதோடு அல்லாமல் பசியுணர்வைக் குறைக்குமாம்.
  • இதனால் கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டம் குறைவதோடு, கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்வதும் தடுக்கப்படுகிறது. மேலும் இஞ்சி செரிமானத்தை மேம்படுத்த உதவி செய்யும். 2-3 கப் இஞ்சியை டீயை தினமும் 2-3 முறை குடிக்க வேண்டும்.
  • உணவுகளுக்கு இடையே சிறு இஞ்சி துண்டை வாயில் போட்டு மென்றும் வரலாம், துருவிய இஞ்சியை உணவுகளில் தூவி சாப்பிடலாம்.
  • உடல் எடையை குறைக்க இஞ்சி கேப்ஸ்யூலை சாப்பிடலாம். ஆனால் இந்த கேப்ஸ்யூலை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் 3 நாட்களில் மாற்றத்தை நன்றாக உணரலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்