நம் உடலில் சுரக்கும் வியர்வையில் புரதம் இருக்கிறது. இதனுடன் பாக்டீரியா சேரும்போதுதான் இந்த புரதங்கள் உடைக்கப்பட்டு Propionic என்ற அமிலமாக மாறி கொள்கிறது. இதனால் உடல் நாற்றத்துக்கு காரணம்.
இதைத்தான் Acid bromidrosis மற்றும் osmidrosis என்று சொல்லப்படுகிறது.
பெண்களுக்கு 14 – 16 வயதிலும், ஆண்களுக்கு 15 – 17 வயதிலும் இந்த வியர்வை நாற்றப் பிரச்னை தீவிரமாக இருக்கும். நமது உடலில் கிட்டத்தட்ட 30 – 40 லட்சம் வியர்வைச் சுரப்பிகள் இருகின்றன.
நமக்கு முகத்திலோ, கைகளிலோ வியர்க்கும்போது வியர்வை நாற்றம் ஏற்படாது. ஆனால் அப்போக்ரைன் (apocrine) என்கிற சுரப்பிகள் அக்குள், காதுகளின் பின்புறம், அந்தரங்க உறுப்புகளில் அதிகமாக நாற்றம் காணப்படும்.
இவை வியர்வையை வெளிப்படுத்தும்போது, அத்துடன் எண்ணெய் பசையான திரவமும் சேர்ந்து வெளியேறுவதால், அந்த இடத்தில் எல்லாம் வியர்க்கும் போது நாற்றம் அதிகமாக இருக்கிறது.
சிலருக்கு வியர்வை நாற்றம் அடித்தால் அவர்கள் நண்பர்களுடன் கூட அவர்களிடம் நெருங்கி பழக மாட்டார்கள். இதனால் பெரிதும் சங்கடத்துக்கு ஆளாக நேரிடுகிறது.
இப்படிபட்ட சங்கடத்தை போக்க சில வழிகள் இருக்கின்றன. அவற்றை கடைப்பிடித்தாலே போதும்.
- தினசரி குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்தை பிழிந்து, அதனுடன் கால் தேக்கரண்டி அளவு உப்பையும் சேர்த்து குளித்து வந்தால் வியர்வை நாற்றம் நீங்கும்.
- குளிக்கும் தண்ணீரில் டெட்டால் போட்டுகுளித்து வரலாம். இதனால் வியர்வை நாற்றம் கட்டுக்குள் வரும்.
- காலை, மாலை இரு வேளைகளிலும் குளித்து வர வேண்டும்.
- தினமும் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.
- இளநீர், மோர், பழச்சாறு, பனை நுங்கு, பதநீர் பருகலாம்.
- அதிக சூடாகவோ, அதிகக் குளிர்ச்சியாகவோ இல்லாத வெதுவெதுப்பான தண்ணீரில், தினம் இரு வேளைகள் கட்டாயம் குளிக்க வேண்டும்.
- நிறமும், மணமும் சேர்க்கப்பட்ட ‘பாத் சால்ட்’ கிடைக்கிறது. ஒரு பக்கெட் தண்ணீரில் 1 டீஸ்பூன் பாத் சால்ட் கலந்து குளித்து வரலாம்.
- கொஞ்சம் வேப்பிலையைக் கசக்கிச் சேர்த்து, தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் குளித்து வரலாம்.
- டீ ட்ரீ அல்லது லேவண்டர் – இந்த இரண்டில் ஏதேனும் ஒரு அரோமா ஆயிலில் வியர்வை அதிகம் சுரக்கும் பகுதிகளில் தேய்த்துக் கொள்ளலாம்.
- குளித்து முடித்ததும், உடலைத் துடைத்து விட்டு, வியர்க்க ஆரம்பிக்கும் முன்பே இதை உபயோகிக்க வேண்டும். கேஸ் இல்லாத டியோடரன்ட் நல்லது. அதை உபயோகிக்கும் போது எரிச்சலோ, குத்தலோ இருந்தால் உபயோகிக்க கூடாது.
- குளித்து முடித்ததும், ஈரத்தை நன்கு துடைத்துவிட்டு, ஆன்ட்டி பாக்டீரியல் டஸ்ட்டிங் பவுடர் பயன்படுத்த வேண்டும்.
- உடைகளை வைக்கும் பீரோ மற்றும் அலமாரிகளையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். ஒருமுறை உபயோகித்த உடையை, பின்னர் துவைத்துக் கொள்ளலாம் என்று மற்ற துணிகளோடு சேர்த்து வைக்கக் கூடாது.
- உணவுப்பழக்கம்கூட ஒருவரின் உடல் நாற்றத்துக்குக் காரணமாகலாம்.
- காலங்காலமாக உடலில் தேங்கிய அந்த நாற்றத்தைப் போக்க, க்ளோரோஃபில் நிறைந்த பச்சைக் காய்கறிகள், கீரைகள் சாப்பிட வேண்டும்.
- வெட்டிவேரை குளிக்கும் தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் குளிக்கலாம்.