இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடாதீங்க... ஆயுளை குறைத்துவிடுமாம்

Report Print Kavitha in ஆரோக்கியம்
5876Shares

நமது உணவு முறையில் உண்டான மிகப்பெரிய மாற்றம் காரணமாக தான் பல நோய்கள் நம்மை ஆட்டிப்படைத்து கொண்டு இருக்கின்றது.

உணவு மருந்தானது போய் உணவே உடலை உருக்குலைக்க வைக்கும் அளவுக்கு உணவு பழக்கத்தில் மாற்றத்தை சந்தித்திருக்கிறோம்.

அப்படி உடலுக்கு கேடுதரும் உணவு பொருளில் முக்கியமான உணவு பொருள்கள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

  • மைதா உணவுகள் உடலில் சென்றால் செரிமானத்தை உண்டு செய்யும். மைதாவில் கலோரி அதிகம் என்பதோடு நார்ச்சத்தும் கிடையாது. மைதா அசிடிட்டி, நெஞ்செரிச்சல் பிரச்சனைகளோடு உடல் எடை அதிகரிப்பையும் உண்டாக்கிவிடும்.

  • பேக்கரி உணவுகளான பன், பர்கர், பிரட், பீட்சா, சமோசா,பப்ஸ் போன்ற உணவுகளை அதிகம் எடுக்க கூடாது. இவை கொழுப்புச்சத்தை மட்டுமே கொண்டிருக்க கூடியவை. அதோடு இவைஎல்லாமே மைதாவை கொண்டு தயாரிக்கப்படுவதால் உடலுக்கு தேவையான ஆரோக்கியமோ, ஊட்டச்சத்தோ கிடையாது என்பதால் இதை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்ப்பதே நல்லது.

  • எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும் கார வகைகளான சிப்ஸ், மொறுமொறு ஸ்நாக்ஸ் வகைகள் போன்று இனிப்பு வகைகளும் எண்ணெயில் பொரித்தெடுக்கப்படுவதுண்டு. பெரும்பாலும் இவை பாமாயில் அல்லது டால்டா சேர்த்து செய்யபடுவதால் இதை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும்.

  • நூடுல்ஸ் முதல் ஐந்து நிமிடத்தில் தயாராக கூடிய இன்ஸ்டண்ட் உணவுகள் வரை பெரும்பாலும் தவிர்த்துவிடுவதே நல்லது. இந்த வகை உணவுகள் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க பிரசர்வேட்டிவ் உடன் செயற்கை வண்ணங்களும் சேர்க்கப்பட்டு பதப்படுத்தப்படுகிறது. இவை உடலுக்கு நன்மை செய்வதை காட்டிலும் குறைபாட்டை உண்டாக்கவே செய்யும்.

  • பட்டை தீட்டப்பட்ட அரிசியில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரையை அதிகப்படுத்தும் காரணிகள் அதிகமாக உண்டு. இதனால் உணவு எளிதில் செரிமானம் ஆவதோடு நீரிழிவு நோய் உண்டாக்கும் வாய்ப்பையும் அதிகரித்துவிடுகிறது.

  • சர்க்கரைக்கு மாற்றாக கிடைக்ககூடிய இந்த செயற்கை சுவையூட்டிகள் சர்க்கரையை விட சுவை மிகுந்தது. சாஸ், குளிர்பானங்கள், நிறமூட்டிகள், மணமூட்டிகள் என எல்லாமே ஆபத்தை உண்டாக்கும் உணவு பொருள்களே. இவை நாளடைவில் பசியின்மை, மூட்டுவலி, கிட்னி செயலிழப்பு, ரத்த அழுத்த குறைபாடு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கிவிடக்கூடும்.

  • பாலாடைக் கட்டி, பன்றி இறைச்சி, மீன், டின்னில் அடைக்கப்படும் பழங்கள் போன்றவை பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆயுளை குறைத்துவிடும் அளவுக்கு அபாயகரமானவையாகவும் இருக்கலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்