உடலில் இருந்து வாயு காற்றாக வெளியேறுவது நமக்கு சங்கடங்களை கொடுக்கிறதோ இல்லையோ நம்மை சுற்றி இருப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும்.
உடல் இயக்க செயல்முறையின் ஒரு பகுதி குடலில் இருந்து வாயு பிரிவது.
உடலில் எங்கும் நிறைந்திருக்கும் காற்று நமது வயிறு, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் ஆகியவற்றை உள்ளடக்கிய மொத்த செரிமான மண்டலத்திலும் இருக்கிறது.
வாயு வருவது எப்படி?
பேசிக்கொண்டே சாப்பிடும் போது, டீ, காபி போன்ற பானங்களை அருந்தும் போதும் நம்மை அறியாமலேயே காற்றை விழுங்கி விடுகிறோம்.
இதில் 80 சதவிகிதம் இரைப்பையிலிருந்து ஏப்பமாக வெளியேறியதுடன், மீதி குடலுக்கு சென்று ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது.
தினமும் சுமார் 2 லிட்டர்வரை வாயு உற்பத்தியாகிறது. இது அப்படியே வெளியேறினால் சுற்றுச்சூழல் கெட்டுவிடும். எனவே, இது பெரும்பாலும் ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, சுவாசப் பாதை வழியாக வெளியேறுகிறது.
வாயுவை தடுக்க இதை செய்யலாம்
முதலில் உணவுப் பழக்கத்தை சரிசெய்ய வுண்டும், பால் ஒவ்வாமை இருந்தால் பால் பொருட்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம்
உடற்பயிற்சி செய்வது அவசியம். உடல் இயங்கினால்தான் உணவு சுலபமாக செரிமானமாகும்.
அதிக வாயு உற்பத்தி செய்யும் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
அதிக சுயிங்கம் சாப்பிடுபவர்கள் உடலில் அதிக அளவு காற்று செல்கிறது, எனவே சூயிங்கம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
புகை பிடிப்பவர்களுக்கும் வாயுத்தொல்லை அதிகமாக இருக்கும்.
மலத்தை வெளியேற்றாமல் அது அதிக நேரம் மலக்குடலிலேயே தங்கி விடும்போதும் காற்றில் துர்நாற்றம் வீசுகிறது.
தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.