பழங்களில் தனிப்பட்ட சுவையும் மணமும் கொண்டது தான் சீத்தாப்பழம்.
சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை என எல்லாமே மருத்துவகுணங்களை கொண்டதுதான்.
சீத்தாப்பழம் குளுக்கோஸ், சுக்ரோஸ் இரண்டுமே நிறைந்திருப்பதால் உடனடியாக உடலுக்கு ஆற்றல் தருகிறது.
அதுமட்டுமின்றி சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி -காம்ப்ளக்ஸ், வைட்டமின் ஏ, நார்ச்சத்து, மெக்னீசியம், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து நிறைந்தது. புரதம், தாது பொருள்கள், இனிப்பு, கொழுப்புசத்து போன்றவை நிறைந்துள்ளது.
இது பல நோய்களை குணமாக்கும் சக்தி படைத்தது. ஆஸ்துமா முதல் மலச்சிக்கல் வரை பல நோய்களை குணப்படுத்துகின்றது.
அந்தவகையில் சீத்தாப்பழம் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.

- சீத்தாப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க இவை இரண்டுமே உதவுகிறது. ரத்த நாளங்களின் விரிவாக்கத்தை ஊக்குவிக்கிறது. இதனால் ரத்த அழுத்தம் சீராகிறது. இதய நோய் மற்றும் பக்கவாதம் அபாயத்தை அதிகரிக்கிறது.
- ஒரு கப் அளவுள்ள சீத்தாப்பழ விழுதில் 5 கிராம் அளவுக்கு நார்ச்சத்து உள்ளது. சீத்தாப்பழத்தில் நார்ச்சத்தும் தாமிரச்சத்தும் சீராக இருப்பதால் செரிமானத்துக்கு உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் வராமல் தடுக்கப்படுகிறது.
- சீத்தாப்பழம் ஜீரண சக்தியை அதிகரிப்பதால் பித்தம், வாந்தி, பேதி, தலைச்சுற்றல் போன்றவற்றை குணப்படுத்தும்.
- சீத்தாப்பழம் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றலை கொண்டது. மனநிலையை சீராக்க உதவும் செரோடோனின் மற்றும் டோபமைன் போன்றவற்றுக்கு வைட்டமின் பி6 முக்கிய பங்கு வகிக்கிறது.இந்த வைட்டமின் மனநிலை கோளாறுகளுக்கு உதவக்கூடியது.
- ஆரோக்கியமாக உடல் எடை அதிகரிக்க வேண்டுமெனில் சீத்தாப்பழத்தை தேர்வு செய்யலாம். இது அதிக ஊட்டச்சத்துக்கள், சரியான அளவு கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களால் நிரம்பியுள்ளது. சீத்தாப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக உடல் எடை அதிகரிக செய்யும்.
- சீத்தாப்பழம் வைட்டமின் பி 6 கொண்டுள்ளது. இது மூச்சுக்குழாய் அழற்சியை எதிர்த்து போராட உதவுகிறது. ஆஸ்துமாவை தடுக்க உதவுகிறது. நுரையீரல் தொடர்பான சிக்கல் இருப்பவர்களுக்கு சீத்தாப்பழம் நன்மை தரும்.
- சீத்தாப்பழத்தை குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்த கூடியது. ஆஸ்துமா, காசநோயை கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.
- சீத்தாப்பழம் உடலுக்கு வலிமை கொடுக்க கூடியது. இதயத்துக்கு பலம் கொடுக்கும் . கால்சியம் நிறைந்திருப்பதால் எலும்பு, பற்கள் பலமடையும். தசைப்பிடிப்பு இருப்பவர்கள் சீத்தாப்பழம் எடுத்துகொள்வதன் மூலம் தசைகள் வலிமையடையும்.
- சீத்தாப்பழம் கருவுறுதலை மேம்படுத்தும், சோர்வு உணர்வை குறைக்கும். எரிச்சலை குறைக்கும் தன்மைகொண்டது. இது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தகூடியது. கண் பார்வையை மேம்படுத்தும்.
- சீத்தாப்பழம் குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் நிறைந்திருக்கும் என்பதால் இதை சாப்பிட்ட உடனேயே ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும் என்கிறார்கள்.
- சர்க்கரை நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாம் இது நார்ச்சத்தும் உள்ள பழம் என்பதால் இது ரத்த சர்க்கரை அளவு உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. மருத்துரின் ஆலோசனையை பெற்று சாப்பிடலாம்.