மஞ்சளை அதிகமாக பயன்படுத்த கூடாது.. ஏன் தெரியுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்
10968Shares

நம்முடைய கலாசாரத்திலும், பாரம்பரிய மருத்துவத்திலும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது மஞ்சள்.

உணவுக்கு நிறமும் சுவையும் கொடுக்க கூடிய மஞ்சள் எல்லோருடைய சமையலறையிலும் முதன்மையாக இடம்பிடித்துள்ள உணவு பொருள் ஆகும்.

மஞ்சள் பொடியை உணவில் சேர்த்துச் சாப்பிடும்போது அதிலுள்ள சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது. இது உடலிலுள்ள செல்களுக்கு முழு பாதுகாப்பை தருகிறது.

இருப்பினும் இதனை அளவோடு பயன்படுத்துவே சிறந்தது. என்னத்தான் இது பல ஆரோக்கிய நன்மைகள் வழங்கினாலும் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

  • அதிகப்படியான மஞ்சள் வயிற்றின் செரிமானத்தை பாதிக்க செய்யும். ஏனெனில் அவர்களது செரிமானம் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்ததுதான். மஞ்சள் இரப்பையில் அமில சுரப்பை அதிகரிக்க செய்கிறது. வயிற்றுபிடிப்பு, பிடிப்புகளுக்கு வழிவகுக்க செய்கிறது.

  • மஞ்சள் ரத்தத்தை மெலிதாக்க செய்கிறது. மஞ்சள் உடல் சுத்திகரிப்பின் போது ரத்தம் மெலிதல் உண்டாகிறது. குறிப்பாக ரத்த மெலிப்பு மருந்துகள் எடுத்துகொள்பவர்கள் மஞ்சளை அதிகம் எடுக்கும் போது இந்நிகழ்வு அதிகமாக பாதிக்கப்படுகிறது.

  • மஞ்சள் அதிகமாக எடுக்கும் போது அது சிறுநீரக கற்களை உருவாக்கும் அபாயத்தை கொண்டிருக்கிறது. அதோடு ஏற்கனவே சிறுநீரக கற்கள் அபாயத்தை கொண்டிருப்பவர்களுக்கு இது அதிகப்படியான விளைவை உண்டாக்கலாம்.

  • மஞ்சள் உடல் இரும்புச்சத்து உறிஞ்சுதலை தடுத்து இரும்புச்சத்து குறைபாட்டை உண்டாக்கலாம். அதே நேரம் ஏற்கனவே இரும்புச்சத்து குறைபாடு பிரச்சனையை கொண்டிருப்பவர்கள் மஞ்சள் அதிகமாக சேர்க்கும் போது அது சத்து குறைபாட்டை அதிகரிக்க செய்துவிடவும் வாய்ப்புண்டு.

  • அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்கள் சிகிச்சைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே மஞ்சளை குறைத்து அல்லது தவிர்க்க வேண்டும். ஏனெனில் மஞ்சள் சிகிச்சையின் போது இரத்த உறைதலை தாமதப்படுத்தலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்