இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் என்றும் இளமைதான்!

Report Print Nalini in ஆரோக்கியம்
601Shares

செர்ரிப் பழம் பார்ப்பதற்கு அழகாகவும், உண்பதற்கு இனிப்பு மற்றும் புளிப்பு சுவையினை உடையதாக இருசுவைகளில் காணப்படுகிறது. செர்ரி பழங்கள் சாப்பிடும் நபர்களுக்கு தோலில் மினுமினுப்பு தன்மை அதிகரித்து இளமை தோற்றத்தை உண்டாக்கும்.

இப்பழத்தில் காணப்படும் ஃபிளவனாய்டுகள் செரிமானத்தை தூண்டுகின்றன. இப்பழத்தில் காணப்படும் விட்டமின்கள் உடலானது ஊட்டச்சத்துகளை உட்கிரகிப்பதை ஊக்குவிக்கிறன.

தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளான இளமையில் முதுமையான தோற்றம், வறண்ட தோல், தோல் சுருக்கம் என அனைத்துவகையான பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வாக அமைகின்றது. கண் பார்வைத் திறனை அதிகரிப்பதாகவும், இதனால் கண் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்களும் செர்ரி பழத்தினை எடுத்துக் கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

ஏராளமான சத்துக்களையும் நோய் எதிர்ப்பு பொருள்களையும் கொண்டுள்ளது இந்த செர்ரி பழம். இது இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது. இவை இரண்டுமே உடலுக்கு நல்லது. இப்பழத்தின் அறிவியில் பெயர் புருனஸ் அவியம். இவை அதிகமாக குளிர்ந்த பிரதேசங்களில் விளைகின்றது.

இதில் இருக்கும் வைட்டமின் பி3 என்ற நியாசின் சத்து தோலை ஆரோக்கியமாக பாதுகாக்கிறது. கொழுப்பை கரைக்கிறது. 100 கிராம் செர்ரிப் பழத்தில் 1000 முதல் 3000 மி.கி வரை வைட்டமின் சி நிறைந்துள்ளது.

அனைத்து வயதினராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக கேக், ஸ்வீட் பப்ஸ் போன்ற உணவுகள் இருக்கின்றன. இதில் பலரும் விரும்பி உண்ணும் வகையில் சேர்க்கப்படும் ஒரு பழம் செர்ரி பழம் ஆகும். பழத்தின் தோல் சிவப்பு நிறத்தில் கருப்பு நிறமாகவும், சதை மெல்லியதாகவும், தாகமாகவும் அடர்த்தியாகவும் இருக்கிறது. தோலில் ஏராளமான சாம்பல் புள்ளிகள் உள்ளன

சதைப்பிடிப்பு

கீல் வாதம் மற்றும் சதைப்பிடிப்பு போன்ற பாதிப்புகளுக்கு எதிராகவும் இது செயல்படும். புற்றுநோளிணி, உடல் முதுமை அடைதல், நரம்பு வியாதிகள், நீரிழிவு போன்ற கொடிய பாதிப்புகளுக்கு எதிராக உடலை காக்கும் ஆற்றல் புளிப்பு செர்ரி பழத்திற்கு உண்டு.

மூளைச் செயல்பாடு

மெலடானின் எனும் சிறந்த நோளிணி எதிர்ப் பொருள் செர்ரி பழத்தில் இருக்கிறது. ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு மூளையில் கட்டி உண்டாதல் போன்ற பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதில் மெலடானின் பங்கு முக்கியமானது.

மூளைச் செயல்பாடு, ஞாபக மறதி போன்றவற்றிற்கு இப்பழத்தினை தொடர்ந்து உண்ணும்போது மூளையின் செயல்திறன் அதிகரிப்பதோடு ஞாபகசக்தியும் மேம்பாடு அடைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

எடையை குறைக்க

உடல் எடை கூடியவர்கள் அதிக எடையை குறைக்க பல வகையான இயற்கை உணவுகளை சாப்பிடுவது அவசியம். செர்ரி பழம் உடல் எடை குறைப்பதில் சிறப்பாக செயல்படுகிறது.

மனஅழுத்தம்

நரம்பு மண்டல குறைபாடுகளால் ஏற்படும் நோய்களான அல்சைமர், பார்க்கின்சன் நோய் போன்றவற்றிற்கு இப்பழம் வரப்பிரசாதமாகும். நாள்பட்ட மனஅழுத்தம், பதட்டம், மிதமிஞ்சிய கவலை, ஏமாற்றம் போன்றவற்றிற்கும் இப்பழம் நிவாரணியாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்