பெண்ணுறுப்பில் ஈஸ்ட் தொற்று வராமல் தடுக்க வேண்டுமா? இந்த 5 உணவுகளை சாப்பிட்டு வந்தாலே போதும்

Report Print Kavitha in ஆரோக்கியம்
446Shares

பொதுவாக பெண்ணுறுப்பில் ஏற்படும் தொற்று என்பது எப்போதும் எரிச்சலூட்டும் ஒரு விஷயமாக கூறப்படுகிறது.

இதனால் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றை பெண்கள் சந்திக்கின்றனர்.

இது தூக்கமின்மை, பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு, நீரிழிவு நோய் முதல் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் வரை பல்வேறு காரணங்களால் ஏற்படுகின்றது.

இதனை தடுக்க மாத்திரைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக சில உணவுப் பழக்க வழக்கங்களை நீங்கள் பின்பற்றி வரலாம்.

தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • தயிர் அல்லது ஆசிடோபிலஸ் பால் போன்ற லாக்டோபாகிலஸ் அமிலோபிலஸ் உயிரினங்களை கொண்ட உணவுகளை சாப்பிடுவது ஈஸ்ட் தொற்றுநோய்களைத் தடுக்க உதவும்.

  • பெண்ணுறுப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த புரோபயாடிக் உணவுகள் உதவுகின்றன. இந்த உணவுகளை எடுத்துக் கொண்ட பெண்களுக்கு ஈஸ்ட் தொற்று 31% ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

  • தேங்காய் எண்ணெய் ஈஸ்ட் தொற்றை குறைக்க பயன்படுகிறது. இந்த தேங்காய் எண்ணெய்யை வாய்வழியாகவும், மேற்பூச்சாகவும் நீங்கள் பயன்படுத்த முடியும்.

  • பூண்டு ஈஸ்ட் தொற்று நோயை தடுக்க உதவுகிறது. ஈஸ்ட் தொற்று நோயை தடுக்க பூண்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பூண்டு ஆன்டி பாக்டீரியல் தன்மை கொண்டது.

  • மஞ்சளில் குர்குமின் என்ற பொருள் உள்ளது. இது தொற்றுநோயை கட்டுப்படுத்த உதவுகிறது. மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது.

  • ஆப்பிள் சிடார் வினிகர் இது ஈஸ்ட் தொற்று நோயை சமாளிக்கவும் உதவுகிறது. ஆப்பிள் சிடார் வினிகரை தண்ணீரில் கலந்து உங்க பெண்ணுறுப்பு பகுதியை சுத்தம் செய்து வரலாம். நீங்கள் குளிக்கின்ற நீரில் கூட இந்த வினிகரை சேர்த்து நீங்கள் பலன் அடைய முடியும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்