உங்கள் இல்லம் தோடி செல்வம் வரானுமா? அப்போ இந்த பொருட்கள் எல்லாம் உங்கள் மனைவிக்கு பரிசாக கொடுங்க

Report Print Kavitha in வீடு - தோட்டம்

பெண்களுக்கு கணவர்கள் கொடுக்கும் சில பரிசுகள் அவர்களின் இல்லத்திற்கு செல்வம் தேடிவரும் என்று கூறப்படுகிறது.

அந்தவகையில் செல்வத்தை ஈர்க்க மனைவிக்கு என்னென்ன பரிசு கொடுக்கவேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.

  • கணவன் மனைவிக்கு சிவப்பு நிற துணியை பரிசாக கொடுக்க வேண்டும். இது லட்சுமி தேவியை ஈர்க்கும் ஒரு விஷயமாகும்.அந்த குடும்பத்திற்கு செல்வம் தேடிவரும்.
  • கணவன் மனைவிக்கு பரிசாக நகையை கொடுக்கும்போது அது முதலீடாக மட்டுமின்றி லட்சுமியின் அருளையும் பெற்றுத்தரும்.
  • கணவன் மனைவிக்கு அலங்கார பொருட்கள் வாங்கி தருவது அவர்களின் உறவை மேலும் வலிமையானதாக்கும். திருமணமான பெண் என்று அடையாளப்படுத்தும் குங்குமம், வளையல், பொட்டு போன்றவற்றை அடிக்கடி வாங்கிக்கொடுங்கள்.
  • அன்பும், காதலும் இந்த பரிசை மட்டும் கொடுத்து விட்டால் போதும் உங்கள் இல்லம் மகிழ்ச்சியானதாக மாறிவிடும். இப்படியிருக்கும் வீட்டில் லட்சுமி தேவி நிலைபெற்று இருப்பார். இது மட்டுமின்றி லட்சுமி தேவியை உங்கள் வீட்டிற்கு அழைக்கும் இரு வழிகளும் உள்ளது.
  • தினமும் 8 முறை மஹாலக்ஷ்மி அஸ்தகத்தை கூறுங்கள். இது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் தடைகளை நீக்கி உங்கள் வீட்டிற்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் கொண்டுவரும். வாழ்க்கையில் அதிக பணப்பிரச்சினை இருந்தால் மஹாலக்ஷ்மி அஸ்தகத்தை 80 முறை கூறவும்.
  • தினமும் மாலை உங்கள் வீட்டில் நெய்விளக்கேற்றி வைப்பது உங்களை எதிர்மறை சக்திகள் நெருங்காமல் பார்த்து கொள்ளும். உங்கள் பூஜையறையில் நெய்விளக்கேற்றும் போது அதனுடன் தேங்காயையும் வைத்து வழிபடவும்.
  • தினமும் துளசியை வழிபடுவது உங்களுக்கு லட்சுமி தேவியின் அருளை பெற்றுத்தரும். எனவே தினமும் காலையில் துளசியை வழிபடுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்